news

News September 8, 2024

மம்முட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

image

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் ‘Dominic and The Ladies purse’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரவு உடையுடன், பெண்கள் பயன்படுத்தும் பர்ஸை கையில் வைத்துக் கொண்டு மம்முட்டி போஸ் கொடுக்கிறார். பின்னனியில் சிலரின் புகைப்படங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில் ஜேம்ஸ்பாண்ட் பட போஸ்டர் உள்ளதால், துப்பறியும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 8, 2024

நிதித்துறை செயலாளர் நியமனம்

image

மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின் கந்தா பாண்டே மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளராக இருந்தார். பாண்டேவை நிதிச் செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதித்துறை செயலாளராக இருந்த டிவி.சோமநாதன், கடந்த மாதம் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

News September 8, 2024

நம்ம தமிழ் பெருமை: தினம் 6

image

*பேசு என்னும் வார்த்தைக்கு தொல்காப்பியர் கொடுத்துள்ள சொற்கள்: பேசு, பகர்- ஆதாரத்துடன் பேசு. செப்பு- பதில் தெரிந்து பேசு. கூறு- வரிசைப்படி பேசு. உரை- அர்த்தத்துடன் பேசு. நவில்- நயமாகப் பேசு. இயம்பு- இசைப்படப் பேசு. பறை- வெளிப்படையாகப் பேசு. சாற்று- அங்கீகரித்துப் பேசு.

News September 8, 2024

LIK கிளிம்ஸ் வீடியோ விரைவில்

image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப்புக்கு ஜோடியாக ஷெட்டி மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

News September 8, 2024

வெண்கலம் வென்ற வீராங்கனை

image

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் 200மீ T12 ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து 3ஆம் இடம் பிடித்தார். 200மீ ஓட்டத்தில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கத்துடன் 16ஆவது இடத்தில் உள்ளது.

News September 8, 2024

பில் கேட்ஸின் பொன்மொழிகள்

image

*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நீங்கள் சும்மா இருக்கும்போது கடிகாரத்தைப் பாருங்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் போது ஒருபோதும் கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கின்றேன்.

News September 8, 2024

உலக ஒழுங்கிற்கு மாபெரும் அச்சுறுத்தல்: CIA

image

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை CIA மற்றும் பிரிட்டன் உளவுத்துறை M16 இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இரு நாட்டு உளவுத்துறைகளும் இணைந்து பொதுவெளியில் கோரிக்கை வைப்பது இதுவே முதல்முறை. பனிப்போர் காலத்தை விட, தற்போது உலக ஒழுங்கிற்கு மாபெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் செய்துவரும் ரஷ்யாவையும் கண்டித்துள்ளது.

News September 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: இல்வாழ்க்கை ▶குறள் எண்: 47 ▶குறள்: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. ▶பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

News September 8, 2024

ஆசிய ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்

image

ஆசிய கோப்பைக்கான ஹாக்கி தொடர் இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்தியாவும், சீனாவும் மோத உள்ளன. இந்திய அணி இதுவரை 4 முறை ஆசிய தொடரை கைப்பற்றியுள்ளது. ஹர்மன்பிரீத் சிங், இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

News September 8, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர்-8 (ஆவணி 23) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45-08:45 AM & 03:15-04:15 PM ▶கெளரி நேரம்: 10:45-11:45 AM & 01:30-02:30 PM ▶ராகு காலம்: 04:30-06:00 PM ▶எமகண்டம்: 12:00-01:30 PM ▶குளிகை: 03:00-04:30 AM ▶திதி: பஞ்சமி ▶நட்சத்திரம்: சுவாதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶யோகம்: மரண, சித்த யோகம் ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

error: Content is protected !!