news

News September 8, 2024

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழகம் வாருங்கள்: CM

image

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். சிகாகோவில் பேசிய அவர், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும், நமது உறவை ஊட்டிய ஒரேதாய் தமிழ்த்தாய் என நெகிழ்ந்தார். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழகத்திற்கு வர வேண்டுமென அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

News September 8, 2024

Health Tips: இந்த ஐந்தை முறையாக பின்பற்றுங்கள்!

image

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, அதனுடன் தொடர்புடைய விஷயங்களை அவசியம் பின்பற்ற வேண்டும். 1)சுகர்: வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 2)சால்ட்: எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு குறையுங்கள். 3)சிகரெட்: புகை பிடிக்கவே கூடாது. 4)ஸ்மைல்: அமைதியான மனநிலை மிக முக்கியம், சிரித்துக்கொண்டே அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள். 5)ஸ்லீப்: 6-8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

News September 8, 2024

Para Olympics: ஆல் தி பெஸ்ட் டீம் பூஜா!

image

17ஆவது பாரிஸ் பாராலிம்பிக்ஸ் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் பிரிவு கயாக் 200M – KL1 போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ஓஜா களம் காணவுள்ளார். மதியம் 1.30 மணிக்கு நடக்கும் அரையிறுதியில் அவர் வெற்றி பெற்றால், 2.55 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பூஜா, படகுப் போட்டியில் தங்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

News September 8, 2024

வெற்றிக்கான முதல் கதவு திறப்பு: விஜய்

image

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே என விஜய் கூறியுள்ளார். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு திறந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிய நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

News September 8, 2024

போரை நிறுத்த களத்தில் இறங்கிய அஜித் தோவல்

image

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், இந்தியாவின் NSA அஜித் தோவல் இந்த வாரம் ரஷ்யா சென்று,அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் பயணத்திற்குப் பின் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய மோடி, அமைதி பேச்சுவார்த்தை குறித்து BRICS கூட்டத்தில் தோவல் விவாதிப்பார் என கூறியதாகத் தெரிகிறது.

News September 8, 2024

பதிவு செய்யப்பட்ட கட்சியானது தவெக: விஜய்

image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததாக விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவே இதுவரை காத்திருந்ததாகவும், தற்போது அனுமதி கிடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தடைகளைத் தகர்த்தெறிந்து கொடி உயர்த்தி கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 8, 2024

பொது அறிவு வினா – விடை

image

1.சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் நாடு எது? 2. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன? 3. கிரிக்கெட் பேட் எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? 4.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது? 5. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ? 6.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ? 7. மிகச்சிறிய கோள் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 8, 2024

ஓய்வை அறிவித்தார் மொயின் அலி

image

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (37) அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது என பேட்டியளித்துள்ளார். 68 டெஸ்ட், 138 ஒருநாள், 92 T20 மற்றும் 352 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏற்கெனவே இவர் 2 முறை ஓய்வை அறிவித்து, தனது முடிவை வாபஸ் பெற்றுள்ளார். இனி ஓய்வுபெறும் முடிவில் பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

News September 8, 2024

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக உயர்ந்து காணப்பட்ட கறிக்கோழி விலை, தற்போது சற்று குறைந்துள்ளது. கறிக்கோழி (உயிருடன்) விலை 1 கிலோ ₹91ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹180 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. முட்டை விலை மொத்த கொள்முதலில் ₹4.80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹6க்கு விற்கப்படுகிறது.

News September 8, 2024

மூலிகை: ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி

image

‘அவுரி அழவனம் அவரை காக்கும்’ என்று அம்மான் பச்சரிசியின் ஆற்றல் குறித்து மூலிகைக் குறள் கூறுகிறது. பெடுலின், ஆல்ஃபா-அமைரின் , கேம்ஃபால் , குவர்சிடின், யூபோர்பின் ஏ போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இம்மூலிகையை முறையே சுத்தி செய்து, நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதை 5 கிராம் அளவு எடுத்து, பசும்பாலில் கலந்து 48 நாட்கள் அருந்தினால், விந்தணுக்கள் அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!