India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என்று பலமுறை தெளிவாக சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் யாரும் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக துணிந்து, தனித்து சந்திக்கும்” எனக் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்., மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கார் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில், பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாகவும், கொலையில் தொடர்புடையோர் உடனடியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டினார். தனது அனுபவத்தில் அரசுக்கு எதிராக இத்தகைய நம்பிக்கையின்மையை பார்த்ததில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஒடிசா – மேற்குவங்கம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், நாளை மாலை (அ) இரவில் கரையை கடக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
இன்று 11 மணிக்கு பொது அறிவு வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ரஷ்யா 2) கிமோனோ 3) வில்லோ மரம் 4) குறிப்பறிதல் 5) கருவிழி 6)15 ஆண்டுகள் 7) புளூட்டோ. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துபவர்களை சமூகம் ஒருபோதும் விரும்பாது என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். அமைச்சர் தர்மேந்திர பாபாவை எதிர்த்து அவரது மகள் பாக்யஸ்ரீ (NCP சரத் அணி) போட்டியிடுவது குறித்து பேசிய அவர், ” தந்தையை மகளை விட யாராலும் நேசிக்க முடியாது. தந்தையை எதிர்த்து போட்டி போடுவது சரியல்ல. நானும் அதை அனுபவித்து என் தவறை ஒத்துக்கொள்கிறேன்” என்றார்.
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையின் கிர்கான் பகுதியில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் பிரசவம் நல்லபடியாக நடைபெற்றதாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தீபிகாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ரன்வீர் சிங்குக்கும் தீபிகாவுக்கும் நவம்பர் 2018இல் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே.
மருத்துவத் துறையில் நடக்கும் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளை தடுக்க அதிரடி உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மருந்தியல் துறை வெளியிட்ட அறிக்கையில், மருந்து & மருத்துவ உபகரண நிறுவனங்கள் சந்தைப்படுத்துதல் நடைமுறை தொடர்பான நெறிமுறை குழுவை அமைக்க வேண்டும். டாக்டர்கள் & அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் முகவர்கள் மூலம் பரிசுப்பொருளோ, பணமோ அளிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ரஜினி, கமல் இணைந்து நாடகத்தில் நடிக்க உள்ளனர். இதற்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் நடிக்க உள்ளதை கார்த்தி உறுதிப்படுத்தினார். சங்கக் கட்டடப் பணி பாதியில் நின்ற நிலையில், விலைவாசி உயர்ந்து சுமை அதிகரித்ததாகவும், கடன் பெறுவதற்கு வங்கியில் 50% வைப்பு நிதி வைக்க பணம் திரட்ட 4 மாதங்கள் ஆனதாகவும் குறிப்பிட்டார். மேலும், விஜய் ₹1 கோடி தந்ததாகவும் கூறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக்- ஜெலினா ஜோடி சாம்பியன் பட்டத்துடன் ₹6.25 கோடி பரிசுத்தொகையையும் வென்றது தெரிந்ததே. ஆனால், யாரும் அறியாத ஒரு தகவல் இருக்கிறது. அது என்னவெனில், போட்டிக்காக கிச்செனோக் (32) தனது திருமணத்தைத் தள்ளிவைத்ததுதான். தனது காதலரும் பயிற்சியாளருமான கிமார்ஸ்கியை திருமணம் செய்ய இருந்த நாளில் அரையிறுதி நடந்ததால், அவர் அந்நிகழ்வை தள்ளிவைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.