news

News September 9, 2024

ஆதாரங்களை அழிப்பதே போலீஸ்தான்

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக அவரது பெற்றோர் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “எங்கள் மகள் செய்யப்பட்டது முதலாகவே, போலீஸார் எங்களுக்கு ஆதரவாக இல்லை. ஆதாரம் கிடைத்தால் போலீஸார் அதை வைத்து விசாரிக்க வேண்டும். ஆனால், எங்கள் மகள் வழக்கிலோ, கிடைத்த எல்லா ஆதாரத்தையும் போலீஸார் அழிக்கவே முயற்சித்தினர்” எனக் குற்றம்சாட்டினர்.

News September 8, 2024

ராசி பலன்கள் (09.09.2024)

image

*மேஷம் – இனிமையான நாளாக அமையும் *ரிஷபம் – பண வரவு இருக்கும் *மிதுனம் – நன்மை உண்டாகும் *கடகம் – சிரமம் ஏற்படும் *சிம்மம் – அதிஷ்டம் வரும் *கன்னி – பக்தியுடன் இருப்பீர்கள் *துலாம் – தெளிவான நாளாக அமையும் *விருச்சிகம் – பாராட்டு கிடைக்கும் *தனுசு – வெற்றி கிடைக்கும் *மகரம் – நலம் உண்டாகும் *கும்பம் – தொழிலில் முன்னேற்றம் இருக்கும் *மீனம் – பரிசு கிடைக்கும்.

News September 8, 2024

டெஸ்டில் ஜோ ரூட் புதிய மைல்கல்

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 6ஆவது இடத்திற்கு ஜோ ரூட் (12,402 ரன்) முன்னேறியுள்ளார். 12,400 ரன்களுடன் இருந்த சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 15,921 ரன்களுடன் இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், காலிஸ், டிராவிட், குக் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News September 8, 2024

CM சென்னை திரும்பியதும் திமுகவில் மாற்றம்: உதயநிதி

image

USA-வில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் கட்சியில் சில மாற்றங்கள் இருக்கும் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பு குழுவில் நடந்த ஆலோசனைகள் அடங்கிய பட்டியலையும் முதல்வரிடம் அவர் வழங்கவுள்ளார். மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, இளைஞர்களுக்கு முக்கியத்துவம், பணியில் தொய்வு காட்டும் நிர்வாகிகள் நீக்கம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

News September 8, 2024

இதை செய்தால் பாக்.குடன் பேசத் தயார்: இந்தியா

image

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை கைவிட்டால், பாக்.குடன் பேச்சு நடத்த தயாரென இந்தியா தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர், அண்டை நாடுகளை பூகோள ரீதியில் மாற்ற முடியாது என்பதை இந்தியா நன்கறியும். அத்தகைய அண்டைய நாடுகளில் ஒன்றான பாக்.குடனான உறவை மேம்படுத்தவே இந்தியா விரும்புகிறது என்றும் கூறினார்.

News September 8, 2024

இந்திய அணி அறிவிப்பு

image

சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. ரோஹித், ஜெய்ஸ்வால், கில், கோலி, கே.எல் ராகுல், சர்பராஸ் கான், பண்ட், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நீங்க மிஸ் செய்யும் இந்திய வீரர் யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News September 8, 2024

பஜ்ரங் புனியாவுக்கு மிரட்டல்

image

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா செப்டம்பர் 6ஆம் தேதி காங்கிரஸில் இணைந்த நிலையில், இன்று அவருக்கு மிரட்டல் வருவதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எண்ணில் இருந்து மிரட்டல் வருவதாக காவல்நிலையத்தில் பஜ்ரங் புனியா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 8, 2024

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

image

TVK கட்சியை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதற்கு, நடிகர் விஜய்க்கு சீமான் வாழ்த்து கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சியை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TVK தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

News September 8, 2024

புனியாவுக்கு வந்த மிரட்டல் குறித்து விசாரணை: சைனி

image

காங்கிரஸில் அண்மையில் இணைந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக ஹரியானா CM நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு எண்ணில் இருந்து தன்னிடம் பேசிய ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புனியா புகார் அளித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு சைனி, போலீஸ் விசாரணை நடத்துவதாகவும், குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.

News September 8, 2024

இணையத்தில் வைரலாகும் சாரா அலிகான் உடை

image

மும்பையில் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அங்கு பெரும் திரை நட்சத்திரங்கள் வந்திருந்த நிலையில் நடிகை சாரா அலிகான் அணிந்து இருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர், 60 ஆண்டுகள் பழமையான மறுசுழற்சி செய்யப்பட்ட Brocade புடவைகளால் தயாரிக்கப்பட்ட லெஹங்கா உடையை அணிந்திருந்தார். இதுகுறித்தான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!