news

News September 9, 2024

மகாவிஷ்ணுவின் சர்ச்சை வீடியோ Deleted!

image

மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் யூடியூப் சேனலில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டது. மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அசோக் நகர் பள்ளியில் ஆசிரியருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவை தனது யூடியூப் சேனலில் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

News September 9, 2024

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் அரசு

image

TNPSC, SSC, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது. 6 மாதம் நடக்க உள்ள இந்த வகுப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். www.cecc.in என்ற இணையதளத்தில் செப். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர விரும்புவோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

News September 9, 2024

Expiry Date, Best Before, Use By என்ன வித்தியாசம்?

image

3க்கும் ஒரே அர்த்தம் என சிலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. காலாவதி தேதி(Expiry Date) என்பது குறிப்பிட்ட தேதிக்கு பின்பு அந்த தயாரிப்பை பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். Best Before என்றால், அந்த தேதிக்குப் பின் கெட்டு விடாது. அதன் சுவை, தரம் சிறிது குறையலாம். Use By date என்பது பயன்படுத்துவதற்கான கடைசி தேதி. கிட்டத்தட்ட காலாவதி தேதி போன்றது.

News September 9, 2024

‘G.O.A.T’ படத்தின் 4 நாள்கள் வசூல் இவ்வளவா?

image

‘G.O.A.T’ திரைப்படம் முதல் நாளில் ₹126 கோடி வசூலித்ததாக Officialஆக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 4 நாள்களில் ₹300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாரமும் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத சூழலில், டிக்கெட் கிடைக்காதவர்கள் இன்று முதல் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க படத்தை பார்த்துவிட்டீர்களா? ஓடிடிக்காக காத்திருக்கிறீர்களா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 9, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு

image

அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு உரையாற்றியது சர்ச்சையானது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், *பள்ளிக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது *அனுமதியின்றி கல்வி சாரா நிகழ்ச்சி நடத்தக்கூடாது *ஆசிரியர்களை தவிர்த்து, பிறர் பாடம் நடத்தக்கூடாது *மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்லக்கூடாது *ஆசிரியர்கள் மாணவர்களிடம் போனில் பேசக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

News September 9, 2024

முதல் டெஸ்ட் போட்டி: இன்று டிக்கெட் புக்கிங்

image

இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45க்கு தொடங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச டெஸ்ட் போட்டி செப்.19 நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விலை ₹1,000 – ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை insider.in இணையதளம் வாயிலாக பெறலாம்.

News September 9, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி

image

*ரஷ்யா: ஈரானிடம் இருந்து பல கோடி மதிப்பிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. *அமெரிக்கா: செவ்வாய் கிரகத்துக்கு 2 ஆண்டுகளில் ஸ்டார்ஷிப்கள் எனும் ஆளில்லா விமானம் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் முடிவு. *வங்கதேசம்: ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை. *பாக்: பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க பாகிஸ்தானில் கல்வி அவசரநிலை அறிவிப்பு.

News September 9, 2024

தப்பிக்கிற வரைக்கும் என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

image

சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியா பறந்ததால், உளவுத்துறை மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கடுப்பான உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், உயர் காவல் அதிகாரிகள் சிலரை போனில் அழைத்து, அவர் தப்பிச் சென்றது குறித்து கடுகடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களோ சென்னை உளவுத்துறையை கைகாட்ட, அப்படியானால் தலைநகரில் பணிபுரியும் உங்களை வேறு ஊருக்கு மாற்றி விடலாமா? எனக் கேட்டு திட்டியுள்ளார்.

News September 9, 2024

விளையாட்டு துளிகள்

image

*ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் ரந்தீர் சிங் தேர்வு *சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் ஸ்கோரிங்கை உறுதிசெய்ய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த IBF முடிவு. *இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா சிரியாவை இன்று எதிர்கொள்ளவுள்ளது. *ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் (செப்.9) இந்திய அணி சீனாவை வீழ்த்தியது.

News September 9, 2024

என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது: மகாவிஷ்ணு

image

பள்ளி மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை பரப்பும் விதமாக பேசி கைதானவர் மகாவிஷ்ணு. பல வழக்குகள் பதியப்பட்ட நிலையில், போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். “இளைஞர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மாணவர்களிடம் பேசினேன். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. என்னை சிறையில் அடைத்தால், கைதிகளை நல்வழிப்படுத்த அவர்களிடமும் உரையாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!