news

News September 9, 2024

Recipe: கொள்ளு இனிப்பு உருண்டை

image

வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் பொன்னிறமாக வறுத்து எடுத்த தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு கையில் சிறிது நெய் தடவி, இந்த மாவை சின்ன உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான கொள்ளு உருண்டை ரெடி.

News September 9, 2024

ஆடைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்

image

*ஸ்கின்னி பிட்: தொடையுடன் இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும். *ஸ்ட்ரெயிட் லெக் ஃபிட்: டெனிம்கள் இடுப்பிலிருந்து விளிம்பு வரை நேராக இருக்கும். *ரிலாக்ஸ்டு ஃபிட்: கோடை காலத்துக்கு ஏற்றவை. *பூட்கட் ரெட்ரோ: விரிந்த கீழ் பாதி இடுப்பளவுடன் சமனாக அமைந்து உயரமாகத் தோன்ற வைக்கும். * லோ ரைஸ்: தொப்புளுக்கு 2 இஞ்ச் கீழே உட்காரும். *மாம் கட்: நீண்ட & சற்று தளர்வான இடுப்பு அளவைக் கொண்டிருக்கும்.

News September 9, 2024

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்

image

கோவை வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார். ஆளுநர் ரவி தலைமையில் நடக்கும் இவ்விழாவை, கடந்த ஆண்டும் அமைச்சர் புறக்கணித்திருந்தார். தொடர்ந்து, இந்த ஆண்டும் அவர் பங்கேற்கவில்லை. ஆளுநர் – தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சமீப காலமாக நடைபெற்ற எந்த பட்டமளிப்பு விழாக்களிலும் திமுக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

News September 9, 2024

குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் ஆஜர்

image

குட்கா முறைகேடு வழக்கில் Ex. மினிஸ்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக Ex. மினிஸ்டர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 27 பேர் மீதும் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அரசின் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

News September 9, 2024

CONG-AAP இடையே இழுபறி ஏன்?

image

ஹரியானா தேர்தலில் CONG-AAP இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக AAP மூத்த தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன் (செப்.12) கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 90 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில், AAP 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. ஆனால், காங்.,5 தொகுதிகளை மட்டுமே தர விரும்புவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது.

News September 9, 2024

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை

image

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – அதிமுக பிரமுகர் வெளியப்பன், சென்னை- ஜெயராஜ், ஆத்துப்பாளையம்- கோகுல், கிருஷ்ணகிரி- பழனி, கோவை- கோகுல், ராமநாதபுரம்- மோகன் ஆகியோர் மதுபோதை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறி ஆகியுள்ளதாக எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

News September 9, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) அரசியல் தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 2) தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முதல்முறையாக எப்போது கொண்டு வரப்பட்டது? 3) 1962இல் இந்தியா மீது சீனா படையெடுத்ததன் காரணம் என்ன? 4) இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்திய ஆட்சியாளர் யார்? 5) கிழக்கின் ட்ராய் என அழைக்கப்பட்ட கோட்டை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 9, 2024

மீண்டும் ஐபிஓ வெளியிடும் Hexaware

image

IT நிறுவனமான Hexaware Technologies, ஐபிஓ வெளியிட செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் ₹9,950 கோடி நிதி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் லிஸ்ட்டான இந்நிறுவனம், 2020ஆம் ஆண்டு சந்தையில் இருந்து வெளியேறியது. AI பிரிவில் முழு கவனம் செலுத்தி வரும் இந்நிறுவனத்தின் ஐபிஓ, முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

News September 9, 2024

இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும்

image

திமுக பவளவிழாவையொட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக் கொடி ஏற்றுமாறு CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கருணாநிதி கட்டிக்காத்த திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றி, பவள விழா நிறைவைக் கொண்டாடுவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில், வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி, நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

News September 9, 2024

Finance Tip: வெற்றிகரமான வர்த்தகத்திற்கு…

image

பங்கு சந்தையில் லாபகரமான வர்த்தகர் ஆக விரும்பும் நபர்கள் இந்த 6 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ➽தனி வர்த்தகத் திட்டம். ➽வர்த்தக மூலதனத்தைப் பாதுகாக்கும் யுக்தி ➽பொழுதுபோக்கிற்காக வணிகம் செய்யக் கூடாது ➽தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் ➽தரவுகளின் அடிப்படையில் கால்குலேட்டட் ரிஸ்க்-ஐ மட்டும் எடுங்கள் ➽பேக்டெஸ்டிங் & ஸ்டாப் லாஸ் செயல்முறையை கடைபிடியுங்கள் .

error: Content is protected !!