India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக மே.வங்க அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, டாக்டரின் இறுதிச்சடங்கில் நடந்த கலவரம், பாதிக்கப்பட்ட பெற்றோர் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, டாக்டர்கள் போராட்டம் & TMC தலைவர்களின் விமர்சனங்கள், மம்தா அரசுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான CBI விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகாவுக்கு வர தயாராக இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அப்பாவு குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்.13இல் நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபலமான சந்தீப் கிஷன் தற்போது தமிழிலும் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளதால் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
பேருந்து நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி இன்று மதுரை வந்தார். அப்போது, திடீரென மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர், கழிவறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
2026இல் ஜப்பானில் (அய்சி நகோயா) நடைபெறவிருக்கும் ஆசியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கென தனி விளையாட்டு கிராமம் உருவாக்கப்படாது என்று JOC அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய JOC முன்னாள் தலைவர் சுனேகாசு டகேடா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக, போட்டியாளர்கள் கிராமத்தில் அல்லாது ஹோட்டல்கள் & சொகுசு கப்பல்களில் தங்கவைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்ககூடும் என்றும் கூறியுள்ளது.
தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் BJP, PM மோடியை கண்டு அஞ்சுவதில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக, 2029 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும், காங்., அந்த தேர்தலில் படுதோல்வி அடையும் எனவும் சாடியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் MGM மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)பிளேட்டோ 2)31 ஜனவரி 1976 3) திபெத் & தலாய் லாமாவை இந்தியா ஆதரித்ததே காரணம் 4) ரிப்பன் பிரபு 5) செஞ்சிக் கோட்டை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
டாடா புதிதாக அறிமுகப்படுத்திய CURVV எலக்ட்ரிக் காரை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு பரிசாக அளித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவரை கௌரவிக்கும் விதமாக முதல் காரை வழங்கியுள்ளது. சரியான நபருக்கு முதல் கார் அளிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விலை ₹17.49 லட்சம் ஆகும்.
Sorry, no posts matched your criteria.