news

News August 13, 2024

திமுக கூட்டணி உடைந்து சிதறும்: ராஜேந்திர பாலாஜி

image

திமுக கூட்டணி ஒரு மாயை, அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். அதிமுக அழிவின் விளிம்பு வரை சென்றாலும், கடைசி நேரத்தில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய கட்சி என்ற அவர், திமுகவுக்கு தைரியம் இருந்தால் தனித்து போட்டியிட தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 2026இல் இபிஎஸ் முதல்வராவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

டிக்கெட் விலையை குறைத்த பாக்., கிரிக்கெட் வாரியம்

image

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான குறைந்த பட்ச டிக்கெட் விலை 50 ரூபாயாக (இந்திய மதிப்பில் ரூ.15) பாக்., கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் – வங்காளதேச டெஸ்ட் தொடரை பார்க்க ரசிகர்கள் அதிகமாக வரமாட்டார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வி.ஐ.பி. டிக்கெட் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 21ஆம் தேதி கராச்சியில் நடைபெற உள்ளது.

News August 13, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 13
▶ஆடி – 28
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 PM
▶குளிகை: 12:00 AM – 01:30 AM
▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News August 13, 2024

BJP தலைமையை ADMK ஏற்றால் கூட்டணி: அண்ணாமலை

image

பாஜகவின் தலைமையை ஏற்க அதிமுக முன்வந்தால் கூட்டணியை பற்றி யோசிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக வாங்கும் இடத்தில் இல்லை என்றும், கொடுக்கும் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் மிக பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் கூறினார்.

News August 13, 2024

ஹாக்கி தரவரிசையில் முன்னேறிய இந்தியா

image

ஹாக்கி அணிகளின் தரவரிசை பட்டியலில், இந்திய அணி 2 இடங்கள் முன்னேறியுள்ளது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா (2848.67) புள்ளிகளோடு 5ஆவது இடத்தில் உள்ளது. தங்கம் வென்ற நெதர்லாந்து (3168.01 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி (3035.28 புள்ளி), இங்கிலாந்து (2973.31) அணிகள் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. கடந்த முறை முதல் இடத்தில் இருந்த பெல்ஜியம் (2958.66 புள்ளி) 4ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

News August 13, 2024

தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது: அன்புமணி

image

போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போதைப் பொருட்களை கட்டுப்படுத்தி, கடத்தல்காரர்களை கைது செய்ய வேண்டிய தமிழக அரசு அதை செய்ய தவறியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வருடந்தோறும் மாணவர்களை வைத்து போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வதால் மட்டும் என்ன பயன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 13, 2024

2036இல் 152 கோடியாக அதிகரிக்கும் மக்கள் தொகை

image

2036இல் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியை தொடும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். 2011இல் பெண்களின் எண்ணிக்கை 48.5% இருந்த நிலையில், 2036இல் 48.8% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் என்று இருந்த பாலின விகிதம், 2036இல் 1000 ஆண்களுக்கு 952 பெண்கள் என அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News August 13, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ பழுக்கக் காய்ச்சிய இரும்பு தான் பட்டை ஆகிறது. ➤ பொறுமையும் நேரமும் மிகவும் சக்திவாய்ந்த போர் வீரர்கள். ➤ வெறும் கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதே. ➤ பாம்பின் விஷத்தையும் மிஞ்சும் நாக்கின் விஷம். ➤ வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது. ➤ தோல்வி இருந்தே அனைத்து புது முயற்சிகளும் தொடங்குகிறது. ➤ கற்றுக்கொள்ள நினைப்பவனுக்கு தோல்வி தடையல்ல.

News August 13, 2024

வன்முறையால் யாரும் பாதிக்க கூடாது: அகிலேஷ்

image

வங்கதேச பிரச்னையை சர்வதே அளவில் இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். எந்த பிரிவு மக்களாக இருந்தாலும் வன்முறையால் யாரும் பாதிக்க கூடாது என்று கூறிய அவர், வங்க தேசத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுக்க வேண்டும் என்றார். வங்கதேசத்தில் கலவரங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 13, 2024

யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க முடியாது: SC

image

யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும் இந்த தேர்வு ஆக. 21 முதல் செப். 4 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக கூறி, இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வை தள்ளிவைக்க முடியாது என உத்தரவிட்டது.

error: Content is protected !!