India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெகவின் மாநாடு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், மாற்றுத் தேதியில் மாநாட்டை நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓலா எலக்ட்ரிக் பங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ₹76க்கு ஐபிஓ வெளியான நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்தையில் பட்டியலிடப்பட்டு ₹157 வரை தொடர் ஏற்றம் கண்டது. லாபம் பார்க்காத இந்நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது மளமளவென சரிந்து ₹105இல் வர்த்தகமாகி வருகிறது.
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிராக அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.
₹12,380 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாத சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழக அரசு கையப்படுத்த வேண்டுமென ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 1946இல் சென்னை மாகாண அரசு 160.86 ஏக்கர் கொண்ட இந்த மைதானத்தை (ஆண்டுக்கு ₹614.13) 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் கட்சி தொடங்குவதாக நடிகர் விஜய்யை அமைச்சர் கீதா ஜீவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். எத்தனை கட்சிகள் தொடங்கப்பட்டாலும், திமுக 7ஆவது முறையாக ஆட்சி கட்டிலில் நிச்சயம் அமரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அரசியல் அறிந்தவர்கள் என்றும், மீண்டும் திரைக் கவர்ச்சியை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
47 நாட்களுக்கு பிறகு இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் வழி வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜிப்ஸம், இயற்கை எரிவாயு உட்பட 40,000 டன் சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
தனது மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். நீண்டகால யோசனை மற்றும் கட்ட பரிசீலனைகளுக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
நவீன உலகத்தில் குடும்பம், அலுவலகம் என நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, இந்த 9 மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். 1) லிப்பிட் ப்ரோபைல் 2) ரத்த சோகை 3) வைட்டமின் குறைபாடு 4) பெல்விக் எக்ஸாம் 5) குளுக்கோஸ் 6) மம்மோகிராபி 7)எலும்பு தாது அடர்த்தி 8) டெக்கா ஸ்கேன் 9)கர்ப்பப்பை புற்றுநோய் 10) தைராய்டு பரிசோதனை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (₹1,000) நிபந்தனைகளை தளர்த்தி மேலும் 2.30 லட்சம் பேரை
சேர்க்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹1,000 திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய விண்ணப்பங்கள் விரைவில் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்படலாம் என்றும் Ex.அரசு ஊழியர்களின் மனைவிகள், புதிதாக திருமணமான பெண்கள் இத்திட்டத்தில் அக்டோபரில் இணைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் மாநிலங்களை மத்திய அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர் “சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது. இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதியை அளிக்கிறது. இதுதான் கல்வியை மேம்படுத்தும் முறையா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.