India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுக மா.செ.க்கள் எண்ணிக்கையை 72லிருந்து 117ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் மா.செ.க்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில், உதயநிதிக்கு நெருக்கமான இளைஞர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. வெளிநாடு சென்றிருக்கும் உதயநிதி, சென்னை திரும்பியதும், இந்த மாற்றம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வந்தாலும், ‘ஏஜென்ட் டீனா’ கதாபாத்திரம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது எனலாம். இந்நிலையில், ஏஜென்ட் டீனாவின் முன் கதையை மையமாக வைத்து தனியாக வெப் சீரிஸ் ஒன்றை அவர் உருவாக்க உள்ளதாகவும், NETFLIX அதனை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை எழுதப்பட்டு வரும் நிலையில், 2025ல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் எனத் தெரிகிறது.
ஆண்டுதோறும் ஆக. 13-ம் தேதி சர்வதேச இடது கை பழக்கத்தினர் நாளாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 10% மக்கள் இடது கை பழக்கத்தினரே. இந்தியாவிலேயே பல பிரபலங்கள் இடது கை பழக்கத்தினர் என்பது பலருக்கும் தெரியாது. பிரதமர் நரேந்திர மோடி, காந்தியடிகள், அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, சச்சின் ஆகியோர் இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான். ஒபாமா, பில்கேட்ஸ், ஐன்ஸ்ட்டைனும் இடது கை பழக்கத்தினர்தான்.
ஜூலை மாதம் EB கட்டணம் செலுத்திய பலருக்கும் TANGEDCOவில் இருந்து இதர கட்டணம் செலுத்துமாறு SMS வந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த மின்வாரிய அலுவலர்கள், ஜூலை 15ல் 4.83% வரை மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, ஜூலை 1 முதல் இக்கட்டணம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியது. அதன்படி, ஏற்கெனவே கட்டணம் செலுத்தியோருக்கும் ஜூலை 1 முதல் 15 வரை கணக்கிட்டு, கூடுதல் தொகைக்கு SMS அனுப்புவதாக கூறினர்.
இந்தியாவின் தேசிய விலங்கு எது என கேட்டால் புலி என்று அனைவரிடம் இருந்தும் பதில் வரும். ஆனால், தேசிய நீர்வாழ் உயிரினம் எது? எனக் கேட்டால் பலருக்கும் தெரியாது. ஆம்! இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம், தெற்காசிய நதிகளில் வாழும் சுஸ் ரிவேரி எனப்படும் டால்பின்களாகும். கங்கை உள்ளிட்ட நதிகளில் இவை காணப்படுகின்றன. டால்பின்கள் கடலில் வாழும் உயிரினம் என நினைத்தவர்களுக்கு இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கலாம்.
தமிழக காங்கிரஸில் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆதரவாளர்களுடன் புதிய அணியை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ராஜிவ் பிறந்தநாளையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லி வரை ஜோதி யாத்திரை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள் தலைமையில் யாத்திரை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு கட்சியில் மற்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காததால், தமிழக காங்கிரஸில் புது அணி உருவானதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் <<13840277>>SC <<>>பிரிவில் 60க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இதில், பெரும்பான்மையாக பறையர், தே.கு. வேளாளர், அருந்ததியர் மக்கள் உள்ளனர். அதே நேரம், குறைந்த எண்ணிக்கையில் பல சமூகங்களும் உள்ளன. அப்படி இருக்கையில் 18% இடஒதுக்கீட்டை 3ஆக பிரிக்க வேண்டும் என்ற கருத்து சர்ச்சையாகியுள்ளது. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் 2018 முதல் 2022 வரை ஆய்வு செய்த இன்சைட் லேண்டர் அனுப்பியுள்ள தகவல்கள் விஞ்ஞானிகளை அதிர வைத்துள்ளது. ஆம். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். செவ்வாயின் மேற்பரப்பிற்கு சில கி.மீ. அடியில் உள்ள பெரும் மலைகளில் தண்ணீர் இருப்பதாகவும், அந்த தண்ணீரானது ஒரு பெருங்கடல் அளவிற்கு இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அருந்ததியர் 3% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அமைச்சர் எல்.முருகன் வந்தார். அப்போது, தமிழ்நாட்டில் 18% SC இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்து, தேவேந்திரகுல வேளாளருக்கு 6%, அருந்ததியருக்கு 6%, ஆதிதிராவிடருக்கு 6% கொடுக்கணும் என அவர் கூறியதாக எம்பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார். இது சாத்தியமா?
உள்ளூர் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பலத்த காயமடைந்தார். இதில், அவரது தொடையின் பின்பகுதி நடக்க முடியாத அளவு சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து செல்லும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால், இலங்கைக்கு எதிராக அடுத்த வாரம் தொடங்கும் டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.