news

News August 13, 2024

ஆண்டுக்கு ஆண்டு முன்னேறும் சென்னை மருத்துவக்கல்லூரி

image

மருத்துவக் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 10ஆவது இடத்தை பிடித்துள்ளது. 250 இளங்கலை இடங்களைக் கொண்ட இக்கல்லூரி, 2019ஆம் ஆண்டு 16ஆவது இடத்தை பிடித்திருந்தது. பின்னர், 2021 ஆம் ஆண்டு 14ஆவது இடம், 2022ஆம் ஆண்டு 12ஆவது இடம், 2023ஆம் ஆண்டு 11ஆவது இடம் என்று முன்னேறி வருகிறது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

News August 13, 2024

TN Factcheck: உதவித்தொகையில் மது அருந்தும் மாணவிகள்?

image

அரசு மாதம் கொடுக்கும் ₹1000 உதவித் தொகையில் மாணவிகள் போட்டிபோட்டு மது அருந்துவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. இதுகுறித்து TN Factcheck, இந்த வீடியோ 2022 மார்ச் மாதத்தில் எடுக்கப் பட்டதாகவும், புதுமைப்பெண் திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானது, பள்ளி மாணவிகளுக்கு அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், மாணவிகளின் அடையாளங்களை மறைக்காமல் அதனை பரப்புவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்துள்ளது.

News August 13, 2024

அரசு பேருந்து கட்டணம் உயர்வு?

image

பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மின் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டணத்தை தொடர்ந்து, பேருந்து கட்டணம் உயர்வு என்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை களையாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

அம்பேத்கர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்தாரா?

image

சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வது தவறில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அம்பேத்கரே உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின. ஆனால், 1936ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய அவர், “பம்பாய் மாகாணத்தில் மகர் சாதியினருக்கு வழங்கப்படும் 15 இடங்களில் ‘மாங்க்’ சாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கத் தயார்” என்று பேசினார்.

News August 13, 2024

24,700 பேருக்கு வேலைவாய்ப்பு: அரசு உறுதி

image

அமைச்சரவைக் கூட்டத்தில் ₹44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வாகனம், பேட்டரி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மேலும் நாட்டிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுவதாகவும் தெரிவித்தார்.

News August 13, 2024

வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா.. அதிரும் டிரெண்டிங்

image

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக ஒருதரப்பு குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில், அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்க வேண்டுமென ட்விட்டரில் பலரும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

News August 13, 2024

ரயில் இல்லாமல் மணிரத்னம் படமா.. இருக்காதே!

image

கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தில், திருச்செந்தூர் ரயில் நிலையம் போல் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ரயில் இல்லாமல் மணிரத்னம் படமா என்ன? என குதூகலித்து வருகின்றனர்.

News August 13, 2024

செயின்ட் மார்டின் தீவின் முக்கியத்துவம் என்ன?

image

வங்கதேசம் வசம் இருக்கும் செயின்ட் மார்டின் தீவு, வெறும் 3 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. அங்கே ராணுவ தளத்தை அமைத்து, வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்கா அதிகாரம் செய்ய நினைப்பதாக <<13829159>>ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்<<>>. அத்தீவின் கடல் எல்லை மியான்மர் நாட்டு எல்லை வரை நீண்டு இருப்பதால் அது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா வசம் இருந்த இத்தீவு, 1947ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.

News August 13, 2024

சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து

image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய சி.வி.சண்முகம் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில், சரியான பிரிவுகள் சேர்க்கப்படவில்லை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை நிரூபிக்கவில்லை, FIRஇல் குறைபாடுகள் உள்ளன என்று கூறி உயர்நீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்தது.

News August 13, 2024

பதஞ்சலிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

image

பதஞ்சலி நிறுவனம் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது. மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று ஏற்கெனவே பதஞ்சலிக்கு எதிராக தீர்ப்பு உள்ளது. அதையும் மீறி, அவர்கள் misleading விளம்பரங்கள் வெளியிடுவதாக மனு அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் பதஞ்சலி மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

error: Content is protected !!