news

News April 16, 2025

4 மாதத்தில் 85,000 விசா… தாராளம் காட்டும் சீனா!

image

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகப் போரை தொடங்கியிருக்கும் சூழலில், இந்தியாவுடன் நெருக்கம் காட்ட சீனா முயன்று வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கலை, கலாசாரத்தை இந்திய மக்கள் அறிந்து கொள்வதற்காக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியுள்ளது. சீனாவின் இந்த திடீர் நெருக்கம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

News April 16, 2025

வக்ஃப் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

image

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. AIMIM MP அசாதுதீன் ஒவைசி, AAP தலைவர் அமானத்துல்லா கான், RJD தலைவர் மனோஜ் குமார் ஜா உள்பட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. திமுக, தவெக, YSR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முறையிட்டுள்ளன.

News April 16, 2025

தற்கொலை செய்த நடிகை மோனல்; 23 ஆண்டாக மர்மம்

image

பத்ரி, சமுத்திரம் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சிம்ரனின் சகோதரி மோனல். 2002 ஏப்ரல் 14-ம் தேதி திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது மோனல் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில், உண்மையான ஆண்மகனை தாம் பார்க்கவில்லை எனக் கூறியிருந்தார். யாரோ காதலித்து அவரை ஏமாற்றிவிட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் 23 ஆண்டுகளாகியும் மோனலை ஏமாற்றியது யாரென தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.

News April 16, 2025

உலகின் முதல் விந்தணு ரேஸ் பார்க்க ரெடியா?

image

கார், பைக் ரேஸ் பார்த்திருப்போம். இதென்ன புதுசா இருக்கேன்னுதான யோசிக்கிறீங்க. ஏப். 25-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. மைக்ரோஸ்கோப்பில் 2 விந்தணு மாதிரிகளை வைத்து நடைபெறும் இந்த ரேஸ், நவீன கேமராவில் படம்பிடிக்கப்பட்டு லைவ் கமெண்ட்ரி செய்யப்படுமாம். ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி.

News April 16, 2025

அமீர், பாவனியின் pre-wedding photo shoot

image

நடிகர் அமீர், நடிகை பாவனிக்கு வரும் 20ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் அமீருக்கு பார்த்துமே பாவனி ரெட்டி மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அமீர் காதலை பாவனி ஏற்க மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். இருவரும் லிவிங் டூகெதரில் 3 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது திருமணத்தில் ஒன்று சேர முடிவு செய்துள்ளனர். தற்போது இவர்களின் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

News April 16, 2025

புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

image

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை உள்ளவர்களுக்கு நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.

News April 16, 2025

மகளிர் உரிமைத் தொகை SMS வரலையா? புதுத் தகவல்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், 1.10 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் TN அரசு ரூ.1,000 வழங்கி வருகிறது. ஒவ்வாெரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் இத்தாெகை வரவு வைக்கப்படுகிறது. அதன்படி நேற்று இத்தொகை வரவு வைக்கப்பட்ட SMS சென்றது. செல் எண் மாற்றினாலாே, நெட்வொர்க் பிரச்னை இருந்தாலோ SMS வராது. ஆதலால் வங்கி சென்று பாஸ்புத்தகத்தை பதிவுசெய்து உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News April 16, 2025

பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

image

சம்பாதிப்பதை போல, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில் கவனம் தேவை. இல்லையேல், திடீர் இன்னலை சந்திக்கக்கூடும். அதனால், பணத்தை 50:30:20 விதிப்படி பிரிப்பது நல்லது. 50% அத்தியாவசிய தேவைகளுக்கு. 30% விரும்பும் விஷயங்களுக்கு செலவிட. 20% சேமிப்புகளுக்கு. ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்கணும் என தோன்றினால், 24 மணி நேரம் காத்திருங்கள். பிறகு யோசியுங்கள். அது கண்டிப்பாக தேவையா என பதில் கிடைக்கும்.

News April 16, 2025

PM இன்டர்ன்ஷிப் திட்டம்: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ₹5,000, ஒருமுறை மட்டும் ₹6,000 அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

GPAY-இல் AUTO PAY வசதி தெரியுமா?

image

தொலைபேசி பில் , EB பில், இன்ஷூரன்ஸ் பில் என மாதாந்திர கட்டணங்களை நேரில் அல்லது இணையத்தில் கட்ட அதிக நேரம் எடுக்கும். ஆனால், GPAY மூலம் மிக எளிதாக கட்டணங்களை செலுத்தலாம். இதற்கு GPAY-ல் செட்டிங்ஸில், சில மாற்றங்களை செய்தாலே போதும். அதன்பின், அந்தந்த தேதியில் GPAY-ல் இருந்து பணம் தானாக எடுக்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு விடும். இந்த வசதி தேவையில்லை எனில், செட்டிங்ஸில் மாற்றம் செய்து நீக்கலாம்.

error: Content is protected !!