India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரவி சாஸ்திரியின் ஆலோசனையால் தான், ஆஃப் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். ஒரு காலத்தில், ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஷாட்டுகளை அடிக்கும்போது அவுட்டாகி விடுவேன் எனக் குறிப்பிட்ட அவர், அப்போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடுமாறு ரவி சாஸ்திரி யோசனை வழங்கியதாக தெரிவித்தார். மேலும், ஆஃப் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளவும் அவர் ஐடியா வழங்கியதாக பண்ட் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், குரங்கம்மை தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகே கடத்தல் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால், இதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
லஞ்சம் வாங்கிய டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் சுற்றுச்சூழல் பொறியாளரை கையும் களவுமாக சிபிஐ கைது செய்துள்ளது. இடைத்தரகரிடம் ₹91,500 லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார். இதன்பின் அவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், 100, 200, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் (₹2.39 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தை முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்தை விட, தமிழக மாணவர்களின் நலன்களில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். NEP தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரின் பதிவை மேற்கோள் காட்டி தர்மேந்திர பிரதான் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
கல்லூரி விளையாட்டுகளில், ‘பிட்டு’ கேமையும் (7 ஸ்டோன்) சேர்க்க ம.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களின் பிரதான விளையாட்டுகளில் 7 ஸ்டோனும் (பிட்டு) ஒன்று. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 7 கற்கள் மீது ஒரு அணியினர் கல்லெறிந்து கலைப்பர். அதனை மீண்டும் அடுக்குவதற்குள் அவர்களை எதிரணியினர் அவுட்டாக்க வேண்டும். அதற்குள் 7 கற்களையும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிவிட்டால் அந்த அணி வெற்றிபெற்றதாக கருதப்படும்.
₹2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% GST வரி விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த 54ஆவது GST கூட்டத்தில் இது தொடர்பாக மாநில அரசுகளிடம், மத்திய அரசு கருத்து கேட்டது. மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த வரி விதிப்பு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க பகுப்பாய்வு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Asian ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில், ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் Hulunbuir நடைபெற்று வரும் AHCT 8வது தொடரில், இன்று IND-JPN மோதின. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய IND, 5 கோல்கள் அடித்தது. JPN அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 5-1 என்ற கோல்கணக்கில் IND அணி JPNஐ வீழ்த்தியது. நேற்றைய ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் IND வீழ்த்தியிருந்தது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பாரம்பரியத்தை விரும்புபவராக இருப்பினும் நவீன விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பார்ப்பதற்கு அமைதியானவராக தெரிந்தாலும், எளிதில் கோபமடைவீர்கள். அபாரமான மன உறுதியும் புத்திக்கூர்மையும் இருப்பதால், எதிரிகளை சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலை என்கிறார்கள். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
முதல்வரின் USA பயணம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி Xஇல் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வருக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு, அங்குள்ள தமிழர்கள் மிக சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள். முதல்வரும் தான் தமிழகத்தில் இருப்பது போன்று உணர்வதாக பல இடங்களில் தெரிவித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.