India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் <<14062012>>காலாண்டு <<>>விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 -10ஆம் வகுப்புக்கு செப்.20 – 27 வரை, 11 – 12ஆம் வகுப்புக்கு செப்.19 -27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு Clade-2 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. Clade-1 வகை குரங்கம்மை நோய் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். இருப்பினும், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனே பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
2045ஆம் ஆண்டுக்குள் நிலவில் சீனா & ரஷ்யா இணைந்து நிரந்தர ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளது. இந்த மையத்திற்கு மின்சாரம் வழங்க நிலவில் அணுமின் நிலையம் ஒன்றையும் உருவாக்க இருநாடுகளும் முடிவுசெய்துள்ளன. இந்த முயற்சியில், சந்திரயான் மூலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய இந்தியாவை இணைக்க ரஷ்யாவின் Rosatom (அணு சக்தி கழகம்) விரும்புவதாக ராய்ட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகை ரஷ்மிகா சமீபத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சமீப நாள்களாக தான் ஆக்டிவாக இல்லாமல் இருந்ததற்கு விபத்துதான் காரணம் என்றும், மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது சிறிய விபத்துதான் என்றும், தற்போது குணமடைந்து வருவதாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார். ரஷ்மிகா விரைவில் நலம்பெற ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறையில் அவர் ஜாலியாக வலம்வந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் செப்.12 வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இலங்கை வெற்றியை பதிவுசெய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 -10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.19 முதல் 27ஆம் தேதி வரையும் காலாண்டுத் தேர்வு நடைபெறும். எனவே, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக விவாகரத்து செய்வது அதிகரித்து வருவதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனுஷ் – ஐஸ்வர்யா, டி.இமான் – மோனிகா ரிச்சர்ட், ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, விஷ்ணு விஷால் – ரஜினி, இயக்குநர் பாலா – மலர், நாக சைதன்யா – சமந்தா உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களை தொடர்ந்து, தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில் 2025 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுக்களை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆன்லைனிலும் பட்டாசுகளை விநியோகிக்க அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரத்தத்தில் சுண்ணச் சத்தின் (கால்சியம்) அளவை முறைப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு உள்ளதென தேரையர் காப்பியம் கூறுகிறது. சைடோஸ்டீரால், இரிடாய்ட்ஸ், குவர்சிடின், கரோட்டின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதில் இருந்து எடுக்கப்படும் உப்புடன் (2கி) ஜாதிக்காய்த்தூள் (5கி) சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், முதுகுவலி, இடுப்புவலி தீரும்; எலும்பு வலுவாகும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.