India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல் மொழி காமெடியால் உலகை ஆண்ட கலைஞர் சார்லி சாப்ளின். 1889-ல் லண்டனில் பிறந்த அவரது இயற்பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின். அவரது நடிப்பில் வெளிவந்த முதல் படம் Making a Living. ‘தி சர்க்கஸ்’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். 1975-ல் இங்கிலாந்து ராணி எலிசபெத் ‘சர்’ பட்டம் வழங்கி அவரை கவுரவித்தார். சார்லி சாப்ளின் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
ஹாலிவுட் நடிகர் நிக்கி காட்(54) இறப்பில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மன அழுத்தம் காரணமாக நிக்கி காட் இந்த முடிவை எடுத்ததாக அவரது சகோதரி எலிஸ் தெரிவித்துள்ளார். ஏப். 13-ல் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அவர், ஏப்.8 ஆம் தேதியே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. BOILER ROOM, I LOVE YOUR WORK உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நிக்கி காட்.
நேற்று GBU படக்குழுவிடம் ₹5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. ரஜினி படத்துக்கே நோட்டீஸ் அனுப்பியவர், அஜித் படத்துக்கு கேட்க மாட்டாரா என்ன? X ட்ரெண்டிங் இதுதான். கன்டென்ட் கிடைக்காமல் இருந்த நெட்டிசன்கள், மீம்ஸை போட்டு வைரலாகி வருகின்றனர். ஒருவேள அவர், இனி நம்ம போன்’ல ரிங்டோன் வெக்குறதுக்கும் காசு கேட்பாரு போலயே! நீங்க பாத்த காமெடியான மீம்ஸ் எது?
குளித்தலை தொகுதி EX MLA <<16112905>>கந்தசாமி<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணா தலைமையில் திமுக முதல்முதலில் ஆட்சியைப் பிடித்து அரசியல் களத்தில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967 தேர்தலிலும், கருணாநிதி தலைமையில் 1971 தேர்தலிலும் குளித்தலையில் வென்றவர் கந்தசாமி எனக் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரேஷன் கடைகளில் ஒரே நாளில் அனைத்து பொருள்களும் கிடைக்கும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரேஷன் கடைகளுக்கு அரிசி, காேதுமை, பாமாயில், பருப்பு, சர்க்கரை தங்கு தடையின்றி அனுப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மாதத்தின் முதல்நாளில் இருந்து எந்த நாளில் வேண்டுமானாலும் அனைத்து பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து இன்று போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள ED மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடக்கும் இந்தப் போராட்டத்தில், அந்தந்த மாநில MLA-க்கள், MP-க்கள், மூத்தத் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்கின்றனர். பாஜகவின் பழிவாங்கும் அரசியல் எல்லை மீறுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ரத்தக் கொதிப்பு (BP) அதிகமானால் நாம் என்ன செய்வோமென்றே தெரியாது. மாத்திரை இல்லாமலே ஆரோக்கியமான உணவுகள் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். தக்காளி, கீரைகள், வெள்ளைப் பூசணி, ஓட்ஸ் உள்ளிட்டவை BP-ஐ கட்டுப்படுத்தும். பூண்டு BP-ஐ கட்டுப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்த பேரிக்காய், ரத்தக் கொதிப்பை சமநிலையில் வைக்கிறது. SHARE IT.
<<16113099>>10-ம் வகுப்பு<<>> மாணவர்களுக்கு நேற்றுடன் பொதுத் தேர்வு முடிவடைந்து, இன்று முதல் (ஏப்.16) விடுமுறை தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி பார்த்தால் இந்த மாதம் 15 நாள்கள், மே மாதம் 31 நாட்கள் என சேர்த்து மொத்தம் 46 நாள்கள் வருகிறது. ஜூன் மாதம் 2 அல்லது 3-ம் தேதி திறக்கப்பட்டால் 48 அல்லது 49 நாள்கள் விடுமுறை. என்ன மாணவர்களே ஜாலிதானே?
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நாளை கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், அமைச்சரவைக் கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுத்து, அதுதொடர்பாக சட்டப்பேரவையில் அரசு அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி-NCR பகுதிகளில், இன்று காலையே வலுவான நடுக்கங்கள் உணரப்பட்டன. தேசிய நில அதிர்வு மையம் (NCS) படி, ரிக்டர் அளவில் 5.9 ஆக உணரப்பட்ட இந்த பூகம்பத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியமாகும். தற்போது வரை பெரிதாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து ஆசிய கண்டத்தின் நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.