India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர், செப்.12 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.10ஆம் தேதி பயணிப்போர் செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதி பயணிப்போர் செப்.13ஆம் தேதியும், ஜன.12ஆம் தேதி பயணிப்போர் செப்.14ஆம் தேதியும், ஜன.14ஆம் தேதி பயணிப்போர் செப்.15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ரயில் நிலைய கவுன்ட்டர்கள், IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். #SHARE IT.
10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்ய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். myAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.14. அதன்பிறகு, ஆதார் அட்டையை புதுப்பிக்க, நீங்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயர்களை நீக்க முடியாது என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். முகவரி மாற்றம், இறப்பு போன்ற காரணங்களுக்காக மட்டுமே பெயர்களை நீக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்காளர்களிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக வாக்காளர்களிடம் தகவல் தெரிவிக்காமல் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கியதாக R.S.பாரதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படம், செப்டம்பர் 13ஆம் தேதி OTTயில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காந்தாரா’, ‘KGF’ போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான ‘ரகு தாத்தா’ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்தி மொழி தொடர்பான கதைக்களத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை நாளை காலைக்குள் எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார், அனுமதி வழங்கியது யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு செப்.20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
திமுக தனது 75ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடவுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பெயரில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் பெயரிலான முதல் விருது, முன்னாள் MP தஞ்சை S.S.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுவரை, பெரியார், அண்ணா, கருணாநிதி, பாவேந்தர், பேராசிரியர் (அன்பழகன்) பெயரில் விருது வழங்கப்படும் நிலையில், முதல்முறையாக ஸ்டாலின் பெயரில் விருது வழங்கப்படவுள்ளது.
உணவு உண்டபின் குறைந்தது 15 – 20 நிமிடங்கள் நடப்பது செரிமானத்திற்கு மிகவும் உதவும். சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதுதான். ஆனால், குளிர்ந்த நீரை குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்ட உடன் உட்காரவோ, படுக்கவோ செல்வது உடல் எடையை அதிகரிக்கும். மேலும், சாப்பிட உடன் டீ, காஃபி குடிப்பது நெஞ்செரிச்சலை உண்டாக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து விரிவாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள் மீது தலா 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில் விரிவாக ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது.
கடந்த 5ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘G.O.A.T’ படம் உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது. முதல் நாளில் இப்படம் ₹126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் ₹288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் விரைவில் இப்படத்தின் வசூல் ₹500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு காலதாமதம் பற்றி புள்ளியியல் நிலைக்குழு உறுப்பினர்கள் (standing committee on statistics) கேள்வி எழுப்பியதால், அக்குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது. பொருளாதார நிபுணர் ப்ரனாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட நிலைக்குழு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 3 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் நடத்தப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.