India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்து, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் பாஜக 240 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவில் கலந்துரையாடலில் பங்கேற்ற அவர், பாஜக விரும்பியதை எல்லாம் தேர்தல் ஆணையம் செய்ததாகக் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இந்தியாவில் 2024 தேர்தலை நடத்தியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார். உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை ஊக்குவிக்கவும், நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையிலும் இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என PM அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இந்த சட்டம் குறித்து உங்களோட பார்வை என்ன? கமெண்டல சொல்லுங்க.
TNPSC, SSC, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத இருப்போருக்கு இலவச பயிற்சிகளை தமிழக அரசு வழங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகம், வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு 10ம் வகுப்புத் தேர்ச்சி, 18 வயது ஆகியவை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.cecc.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கனமழையால் தெலுங்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி, மக்கள் அவதிப்பட்டு வருவது தெரிந்ததே. இந்நிலையில், மக்களின் துயரத்தைப் போக்க நடிகர் சிம்பு தனது பங்களிப்பாக ₹6 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். தெலுங்கானா & ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ₹3 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். டோலிவுட்டிக்கு வெளியே இருந்து நிதி வழங்கிய ஒரே நடிகர் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது.
வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். வி.சி.க மது ஒழிப்பு மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது என்றும், அதிமுக தவிர்க்க இயலாத மாபெரும் அரசியல் கட்சி என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவனின் அதிமுக அழைப்பு, திமுக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், ஓவர்சீஸை தவிர்த்து மற்ற இடங்களில் ‘G.O.A.T’ திரைப்பட வசூல் மிகப்பெரிய அடி வாங்கி இருப்பதாக திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிகளில் CSK போட்டிக்கு பதிலாக இந்தியா மேட்ச் காட்டி இருந்தால், இந்தியா முழுவதும் கொண்டாடி இருப்பார்கள் என வெங்கட் பிரபுவே கூறியுள்ளார். ₹1,000 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், ₹500 கோடியை தாண்டுவதே கஷ்டம் என்கிறார்கள்.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பன்றி 2) மெர்குரி 3) பிட்மேன் 4) சுதேசமித்திரன் 5) கரையான் 6) போலந்து 7)அஞ்சல் குறியீட்டு எண். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் 20 kmக்குள் பயணிப்பவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Fast Tag முறைக்கு மாற்றாக சேட்டிலைட் உதவியுடன் செயல்படும் GNSS முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், நேஷனல் பர்மிட் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள், 20 kmக்குள் பயணித்தால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இது குறித்து உங்களோட கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.