India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று பேசியபோது, மதுவை ஒழிக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே அதிமுகவுக்கு தாம் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார். 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த அழைப்பு கூட்டணிக்கானது இல்லை என்றும் விளக்கினார்.
ஆதரவாக இருப்பதை போன்று IOA தலைவர் பி.டி.உஷா பாசாங்கு செய்ததாக வினேஷ் போகத் கடுமையாக விமர்சித்துள்ளார். மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போகத்தை பி.டி.உஷா சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் வெளியானதை குறிப்பிட்டு, அரசியலுக்காக அந்த போட்டோ எடுக்கப்பட்டதாக போகத் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு அவரால் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்றார்.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறியீட்டில் TN, AP உள்ளிட்டவை பின் தங்கியுள்ளன. செப்டம்பர், தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப், கர்நாடகா, டெல்லி, உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக ஊட்டச்சத்து விழிப்புணர்வு கொண்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரம், குஜராத், TN, ராஜஸ்தான், AP, பிஹார் ஆகிய மாநிலங்கள் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன.
செபி தலைவர் மதாபி புச் பல்வேறு நிறுவனங்களிடம் பணம் பெற்றதாக HINDENBURG ஆய்வு நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ICICI, டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், பிடிலைட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து மதாபியின் இந்திய ஆலோசனை நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கைமாறியதாக தெரிவித்துள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை அந்நிறுவனங்கள் மறுத்துள்ளன.
மூடநம்பிக்கை கருத்தை மாணவரிடம் பரப்பும் விதமாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதே போல் போலீசார் மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. 11 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில், ஓபன் பிரிவில் 197 அணிகளும், பெண்கள் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. இந்திய சார்பில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் உள்ளனர். கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
சர்வதேச சந்தையில் <<14072983>>Crude Oil விலை<<>> தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே நேரம், இந்தியாவில் Petrol, Diesel விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. Crude Oil விலை உயரும் போது, உடனடியாக Petrol விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும் போது Petrol விலையை குறைக்காதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவற்றின் விலையை குறைக்க அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி பிரிவை அறிவித்ததாக அவரது மனைவி ஆர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இது குறித்து கருத்து கூறிய ஆர்த்தி, ரவியிடம் மனம் விட்டு பேச பல முறை முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் ஆலோசிக்காமல் சொந்த விருப்பத்தை சார்ந்து, அவராகவே முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
1) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 2) போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? 3) தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார்? 4.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது? 5) குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்? 6) தக்காளியின் பிறப்பிடம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
‘கோலி இந்திய அணியில் உள்ள ஆஸ்திரேலியர்’ என ஆஸி. வீரர் சுமித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களை போல கோலியின் சிந்தனையும், செயல்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோலி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை காட்டிலும், மிக நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். நவம்பரில் ஆஸி. செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.