news

News September 9, 2024

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்

image

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் MGM மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News September 9, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)பிளேட்டோ 2)31 ஜனவரி 1976 3) திபெத் & தலாய் லாமாவை இந்தியா ஆதரித்ததே காரணம் 4) ரிப்பன் பிரபு 5) செஞ்சிக் கோட்டை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 9, 2024

ஒலிம்பிக்ஸ் வெற்றியாளருக்கு டாடாவின் ‘முதல்’ பரிசு

image

டாடா புதிதாக அறிமுகப்படுத்திய CURVV எலக்ட்ரிக் காரை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு பரிசாக அளித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவரை கௌரவிக்கும் விதமாக முதல் காரை வழங்கியுள்ளது. சரியான நபருக்கு முதல் கார் அளிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விலை ₹17.49 லட்சம் ஆகும்.

News September 9, 2024

மருத்துவர்கள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் ஆணை

image

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ஜி கர் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி தெரிவித்துள்ளது. அதேநேரம், பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News September 9, 2024

ரயில்வே துறையில் பணியாற்ற விருப்பமா?

image

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் என 2 விதமான பணிகளுக்கு அக்.13ஆம் தேதிக்குள் <>rrbapply.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Share it.

News September 9, 2024

வதந்தி பரப்புவோரை கண்டிக்கிறேன்: இபிஎஸ்

image

TVKவில் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என இபிஎஸ் மறுத்துள்ளார். இது போன்ற வதந்தி பரப்புபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு கடல் என்றும், வலிமையான இயக்கம் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர், செஞ்சி ராமசந்திரனை போல ஆயிரக்கணக்கான பேர் அதிமுகவில் அங்கம் வகித்து உழைத்து வருவதாகவும் விளக்கமளித்தார்.

News September 9, 2024

பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் CBI அறிக்கை தாக்கல்

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இயற்கைக்கு மாறான முறையில் அவர் மரணமடைந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க மே.வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய அவர் ஆக. 8இல் படுகொலை செய்யப்பட்டார்.

News September 9, 2024

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா?

image

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Mpox அறிகுறியுடன் இந்தியா வந்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் Mpox வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

News September 9, 2024

EPS தலைமையில் அதிமுக அழியும்: வைத்திலிங்கம்

image

2026 தேர்தலோடு அதிமுக அழிந்துவிடும் என்று தினகரன் கூறுவது உண்மைதான் என EX அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இபிஎஸ் தலைமையால் அதிமுகவின் வாக்கு வங்கி 20% ஆக குறைந்துள்ளதாகவும், அதிமுக ஒன்றிணைய கூடாது என்று நினைப்பவர்கள் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் குறிப்பிட்டார். EPS, OPS, TTV, சசிகலா உள்ளிட்டவர்கள் இணைய வேண்டும் என்றும், 2025இல் இதற்கு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.

News September 9, 2024

மாய வளையத்தில் CM ஸ்டாலின்: ராமதாஸ்

image

சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று ஒரே நாளில் 6 பேர் <<14057219>>படுகொலை<<>> செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதெல்லாம் CM ஸ்டாலினுக்கு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தம்மை சுற்றி மாய வளையம் அமைத்து TN சொர்க்கபுரியாக திகழ்வதாக நம்பிக் கொண்டிருப்பதாகவும் முதல்வரை விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!