India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப்புக்கு ஜோடியாக ஷெட்டி மற்றும் முக்கிய கதாபத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸ் 200மீ T12 ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 24.75 வினாடிகளில் கடந்து 3ஆம் இடம் பிடித்தார். 200மீ ஓட்டத்தில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இதைத் தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கத்துடன் 16ஆவது இடத்தில் உள்ளது.
*நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு. *நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள். *நீங்கள் சும்மா இருக்கும்போது கடிகாரத்தைப் பாருங்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் போது ஒருபோதும் கடிகாரத்தைப் பார்க்காதீர்கள். *நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கின்றேன்.
காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை CIA மற்றும் பிரிட்டன் உளவுத்துறை M16 இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இரு நாட்டு உளவுத்துறைகளும் இணைந்து பொதுவெளியில் கோரிக்கை வைப்பது இதுவே முதல்முறை. பனிப்போர் காலத்தை விட, தற்போது உலக ஒழுங்கிற்கு மாபெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் செய்துவரும் ரஷ்யாவையும் கண்டித்துள்ளது.
குறள் பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: இல்வாழ்க்கை
குறள் எண்: 47
குறள்: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. பொருள்: நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
ஆசிய கோப்பைக்கான ஹாக்கி தொடர் இன்று தொடங்கி வருகிற 17ஆம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் இந்தியாவும், சீனாவும் மோத உள்ளன. இந்திய அணி இதுவரை 4 முறை ஆசிய தொடரை கைப்பற்றியுள்ளது. ஹர்மன்பிரீத் சிங், இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
செப்டம்பர்-8 (ஆவணி 23)
ஞாயிறு
நல்ல நேரம்: 07:45-08:45 AM & 03:15-04:15 PM
கெளரி நேரம்: 10:45-11:45 AM & 01:30-02:30 PM
ராகு காலம்: 04:30-06:00 PM
எமகண்டம்: 12:00-01:30 PM
குளிகை: 03:00-04:30 AM
திதி: பஞ்சமி
நட்சத்திரம்: சுவாதி
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
யோகம்: மரண, சித்த யோகம்
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இயக்கி, நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்தின் டிரெய்லர் வருகிற 11ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலும் வெளியாகி கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இவர் கடைசியாக நடித்த ‘பிடி சார்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இன்று (செப்டம்பர் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் நவ்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 47.32 மீட்டர் தூரம் எறிந்து பதக்கம் வென்றுள்ளார். இந்தியா இதுவரை 6 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கத்துடன் 18வது இடத்தில் உள்ளது. இந்த பாராலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியா வெல்லும் இரண்டாவது வெள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.