news

News April 16, 2025

15 நாளில் எப்படி? சவுக்கு சங்கர் தாயாருக்கு ஐகோர்ட் பதில்

image

தூய்மை பணியாளர்கள் உடையணிந்து யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், கழிவுநீரை கொட்டிய வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 நாளில் விசாரணை சரியில்லை என கூறி சிபிஐக்கு மாற்ற முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது.

News April 16, 2025

நடிகர் ஸ்ரீ மாயம்… தேடும் நண்பர்கள்

image

மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ, அண்மையில் சமூகவலைதளங்களில் பகிர்ந்த படங்களிலும், வீடியோவிலும் உடல் மெலிந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை காண்பதற்கு நண்பர்கள் சென்றபோது காணவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு எங்கும் சென்று விட்டாரா? எனத் தெரியவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடுகின்றனர்.

News April 16, 2025

BREAKING: மீண்டும் கனமழை எச்சரிக்கை

image

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. நாளை முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.

News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: CM

image

மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டத்திருத்தம் பேரவையில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து உரையாற்றிய CM ஸ்டாலின், இந்த சட்டத்திருத்தத்தால் உள்ளாட்சி அமைப்புகளில் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்திலும், குரலற்றவர்களின் குரலாகவும் திராவிட மாடல் ஆட்சி இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

News April 16, 2025

அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவரா?

image

குட் பேட் அக்லி படம் ஹிட் அடித்ததால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் புதிய படத்தில் வெங்கி கமிட்டாகி இருப்பதாகவும் அது முடிந்ததும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News April 16, 2025

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மர்ம மரணம்

image

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மஞ்சூர் அருகேவுள்ள மேல் கொட்டரகண்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). முன்னாள் ராணுவ அதிகாரியான அவர், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும் இருந்தார். மனைவியை பிரிந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராஜ்குமார் நேற்று வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இயற்கை மரணமா, தற்காெலையா என போலீஸ் விசாரித்து வருகிறது.

News April 16, 2025

அன்னை இல்லம் யாருக்கு? தீர்ப்பு ஒத்திவைப்பு

image

நடிகர் பிரபுவின் அண்ணனும், தயாரிப்பாளருமான நடிகர் ராம் குமார் குடும்பத்தினர் பெற்ற கடனுக்காக நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நடிகர் பிரபு வழக்குத் தொடர்ந்தார். அந்த வீட்டிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ராம்குமாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News April 16, 2025

9 மாவட்டங்களில் மதியம் 2.30 மணி வரை மழை

image

9 மாவட்டங்களில் மதியம் 2.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கோவை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட்.

News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

image

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

News April 16, 2025

பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி மழுப்பல்

image

பாஜகவுடன் கூட்டணி வைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமித் ஷா சென்னை வந்தபோது, அன்புமணி அவரை சந்திப்பதை தடுக்க தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக பேசப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமையுமா என அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவதாக கூறி மழுப்பலாக பதிலளித்தார்.

error: Content is protected !!