news

News August 17, 2024

முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு உத்தவ் தாக்கரே முற்றுப்புள்ளி

image

காங்கிரஸ், என்சிபி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஆதரிப்போம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதிக இடங்களில் வெல்லும் கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் உடன்பாடு இல்லை என்ற அவர், பாஜக வீழ்த்த வேண்டும் என்பதை ஒற்றை நோக்கமாக கொண்டு ‘மகா விகாஷ் அகாதி’ கூட்டணி செயல்படுகிறது என்றார். கடந்த வாரம் சோனியாவை சந்தித்த உத்தவ், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

News August 17, 2024

தேசிய விருது மகிழ்ச்சியை தருகிறது: நித்யா மேனன்

image

முதல் முறையாக தேசிய விருது பெற்றதால், தான் மிகவும் மகிழ்ச்சியாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். தேசிய விருது பெற ஆச்சரியமான படங்களை செய்ய வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு சிம்பிளான படத்துக்கு, உண்மையான விருது கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனுஷ், நித்யா மேனன் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

ஆகஸ்ட் 17: வரலாற்றில் இன்று

image

▶1947 – இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
▶1970 – இயக்குநர் ஷங்கர் பிறந்த தினம்
▶1993 – பிரபல நடிகை நிதி அகர்வால் பிறந்த தினம்
▶1999 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தனர்.
▶1999 – நடிகை கௌரி ஜி கிஷன் பிறந்த தினம்
▶2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக்ஸில் 8 தங்கப்பதக்கத்தை வென்றார்.

News August 17, 2024

தேர்தல் ஆணையத்தை பாராட்டிய பரூக் அப்துல்லா

image

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தை பாராட்டியுள்ளார். பாராளுமன்ற தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலை நடத்த விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என கூறியுள்ளார். 90 தொகுதிகள் உள்ள அந்த மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

News August 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: நீத்தார் பெருமை
▶குறள் எண்: 25
▶குறள்:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
▶பொருள்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

News August 17, 2024

ஐபிஎல் தொடரில் விளையாட ஸ்மித் விருப்பம்

image

ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட விரும்புவதாக ஆஸி., முன்னாள் வீரர் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை விரைவில் பதிவு செய்ய இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்மித் கடைசியாக 2021இல் ஐபிஎல் தொடரில் விளையாடினார். கடந்த 2 முறை நடைபெற்ற ஏலத்தில், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 17, 2024

வன்முறையில் பாஜகவுக்கு தொடர்பு: மம்தா

image

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையை பாஜக மற்றும் சிபிஎம் கட்சியினர் இணைந்து சூறையாடியதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு பேரணி நடத்திய அவர், பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், மருத்துவமனையை தாக்கியவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, கொலை நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையை நள்ளிரவில் மர்ம நபர்கள் சூறையாடினர்.

News August 17, 2024

யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்: பிரேமலதா

image

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். முதல்வராக யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து வாக்களிப்பார்கள் என்று தெரிவித்த அவர், தேமுதிக எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக செயல்படுகிறது என்றார். முன்னதாக, தலித் ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியாது என திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!