India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிட்டோஜாக் அமைப்பு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசாணை 243 நீக்கம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட விரும்பாத ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி போராட்டத்திற்கு அழைக்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று உள்ளிட்டவற்றுக்கு சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை திடீரென பாதிக்கப்படவே கடந்த 3ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண வார்டில் முதலில் அனுமதிக்கப்பட்ட அவர், 5ஆம் தேதி ICU-க்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆரம்ப பொது வழங்கல் (<<14064794>>IPO<<>>) என்பது மூலதனத்தை திரட்டுவதற்காக நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் செயல்முறையை குறிக்கிறது. கொடுக்கப்பட்ட கால அளவில் முதலீட்டாளர்கள் IPOக்கு அப்ளை செய்யலாம். அவ்வாறு அப்ளை செய்வதை சப்ஸ்கிரைப் என்கிறோம். IPO நிறைவடைந்ததும், சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும். பிறகு, பங்குச்சந்தையில் மற்ற பங்குகளை போல அவை வர்த்தகமாக தொடங்கும்.
விஜய் கட்சியால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள TVK கட்சி பாஜகவுக்கு போட்டியாக இருக்குமா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பாஜக தமிழகத்தில் தேசிய கட்சியாக உள்ளது, தேசிய எண்ணம் கொண்ட வாக்காளர் விருப்பங்களை பூர்த்தி செய்கிறது என்று கூறினார். விஜய் கட்சி, பாஜகவுக்கு போட்டி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை பரப்பும் விதமாக பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். அதேபோல, கோவையில் மருத்துவ முகாமின் போது பள்ளி மாணவியிடம் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து, பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வாரத்துக்குள் வகுக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் பல பொய் செய்திகளும், வதந்திகளும் காட்டுத் தீயாக பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில், இதற்கு ‘செக்’ வைக்கும் வகையில் யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்களை முறைப்படுத்த புதிய ஒளிபரப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவன IPO நேற்று தொடங்கிய நிலையில், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 2 மடங்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ₹6,500 கோடி நிதி திரட்டுவதற்காக வெளியாகும் இந்த IPO, நாளை நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை ₹66 – ₹70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு Allotment கிடைத்தால், செப்.13இல் அவர்களது டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். வரும் 16இல் சந்தையில் பட்டியலாகிறது.
ஆதார் அட்டையை போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. வேளாண்மை துறையில் டிஜிட்டல் முறையை புகுத்தும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வருகிற மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு இந்த அட்டை வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் விளைபொருட்களுக்கான ஆதரவு விலை, விவசாய கடன் உள்ளிட்டவற்றை எளிதில் பெறலாம்.
IND-BAN டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை, முஷ்பிகுர் ரஹீம் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சச்சின் 7 டெஸ்டில், 5 சதத்துடன் 820 ரன்கள் எடுத்துள்ளார். ரஹீம் 8 போட்டிகளில் விளையாடி 2 சதத்துடன் 604 ரன்கள் அடித்துள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க மேலும் 217 ரன்கள் தேவை. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் வரும் 19ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
வசதி, வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில், மக்களிடம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இது தற்கொலையை நோக்கி தள்ளுகிறது. பொருளாதாரம், உளவியல் சிக்கல்களால் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலானோர் சமூக அழுத்தங்களால் அந்த முடிவை நோக்கி தள்ளப்பட்டவர்களே. உலக தற்கொலை தடுப்பு தினத்தில் மன அழுத்தத்தில் இருப்பவர்களை அதில் இருந்து மீள உதவுவோம். பிரச்னை எதுவாயினும், தற்கொலை ஒரு தீர்வல்ல.
Sorry, no posts matched your criteria.