news

News April 16, 2025

சாதிப் பெயர்களை நீக்குக: ஐகோர்ட் அதிரடி

image

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே போல் பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், சாதி இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அரசு நடத்தும் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசுப் பள்ளி என பெயர் சூட்டவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

News April 16, 2025

ஒரே நைட்டில் ஓஹோன்னு வாழ்க்கை!

image

சிலி நாட்டில், Hinojosa(62) என்பவர் வீட்டை சுத்தம் செய்தபோது, ஒரு சீட்டு கிடைத்துள்ளது. அது அவரின் தந்தை 1960களில் வங்கியில் டெபாசிட் செய்த ₹1.4 லட்சத்தின் பாஸ்புக். வங்கி மூடப்பட்டாலும், ‘State Guarantee’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வங்கி திவாலானாலும் பணத்திற்கு அரசு பொறுப்பு. முதலில், அதிகாரிகள் மறுக்க, கோர்ட் வரை சென்று ₹10.27 கோடியை வாங்கி விட்டார் Hinojosa. என்ன ஒரு லக்!

News April 16, 2025

நாதகவிலிருந்து சாட்டை துரைமுருகன் விலகல்?

image

நாதக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். அவரின் யூடியூப் சேனலில் தொடர்ந்து வெளியிட்ட பல்வேறு பதிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், தனது சமூகவலைதள பக்கத்தில் நாதக கொள்கை பரப்பு செயலாளர் என்று இருந்ததை கண்டென்ட் கிரியேட்டர் என சாட்டை துரைமுருகன் திடீரென மாறியுள்ளார். இதனால் அவர் நாதகவிலிருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

News April 16, 2025

நேதாஜியின் நண்பர் காலமானார்

image

நேதாஜியின் நெருங்கிய நண்பரான நாகலாந்தை சேர்ந்த Poswuyi Swuro (106) நேற்று காலமானார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் நாகலாந்து நோக்கி முன்னேறியபோது வழிகாட்டியாகவும், நேதாஜியின் மொழி பெயர்ப்பாளராகவும் Poswuyi Swuro செயல்பட்டார். நேதாஜியுடன் தொடர்பு கொண்டவர்களில் இவர் மட்டுமே உயிருடன் இருந்தார். நாகாலாந்தில் கிராம பஞ்சாயத்து தலைவராகவும், கிறிஸ்தவ தேவாலய பாஸ்டராகவும் இருந்துள்ளார். RIP.

News April 16, 2025

ஜிகு ஜிகு ரயிலின் முதல் பயணம்…

image

இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கியது எப்போது தெரியுமா? 1853, ஏப்ரல் 16-ம் தேதி தான். 21 குண்டுகள் முழங்க, 3 இன்ஜின்கள், 14 பெட்டிகளுடன் தொடங்கியது. போரி பந்தர்-தானே வரை 34 கி.மீ தூரத்தை 1.15 மணி நேரத்தில் கடந்த ரயிலில் 400 பேர் பயணித்தனர். ரயில்வேயின் 172வது ஆண்டையொட்டி மலரும் நினைவுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். அந்த போரி பந்தர் தான் மும்பை CST ரயில் நிலையம்.

News April 16, 2025

தமிழ் அறிஞர்களுக்கான உதவித் தொகை உயர்வு

image

சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித் தொகை ரூ.7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

News April 16, 2025

WhatsApp ஹேக் ஆகிடுச்சா? ஈசியா சரி பண்ணிடலாம்!

image

WhatsApp ஹேக் செய்யப்பட்டால், முதலில் WhatsApp-ஐ Uninstall செய்யவும் *Android போனில் இருந்து சிம் கார்டை எடுத்து, கீபோர்டு போனில் சொருகவும் *Wifi மூலமாக போனில் மீண்டும் WhatsApp-ஐ Install செய்யவும் *Verification Code-ஐ பெற ஒப்புதல் அளிக்கவும் *கீபோர்டு போனில் வரும் Code-ஐ WhatsApp-ல் இட்டு, Verify செய்யவும் * பிறகு, போனை Restart செய்யும் போது, அக்கவுண்ட் Recover-ஆகி விடும். SHARE IT.

News April 16, 2025

பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு?

image

பாஜக இளைஞரணியின் தேசியத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜக இளைஞரணியின் (BYJM) தேசியத் தலைவராக அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது அந்த பொறுப்பு கர்நாடக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவிடம் உள்ளது.

News April 16, 2025

அம்மாடியோவ்! சீனாவுக்கு 245% வரியாம்

image

சீனாவுக்கு பதிலடி தர 245% அளவுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தனது நாட்டின் பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி மிக அதிகமாக சீனாவுக்கு 145% அளவுக்கு இறக்குமதி வரி விதித்திருந்தார். சீனாவும் பதிலடியாக வரி விதித்தது. ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா வரியை 245% உயர்த்த முடிவெடுத்துள்ளது.

News April 16, 2025

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு…

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையால் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் VIP பிரேக் தரிசன டிக்கெட் (₹500 டிக்கெட்) வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் இன்று முதல் பாதியாக நிறுத்தி வைத்துள்ளது. VIP பிரேக் தரிசனத்திற்கான நேரம் குறைக்கப்பட்டு, அதில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

error: Content is protected !!