news

News August 18, 2024

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அறிக்கை

image

சட்டம் ஒழுங்கின் நிலை குறித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை அளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போராடி வரும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 18, 2024

வாசிப்பு பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்

image

நாவல், கதை வாசிக்கும் போது அதில் இடம்பெறும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் புதிய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன. இதனால் கற்பனை திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றல் மேம்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்கு மனது பக்குவப்படுகிறது. பல்வேறு துறை அறிவை புத்தக வாசிப்பு அளிக்கிறது. கவனச் சிதறலை தடுத்து கவனத்தை குவிக்கும் திறன் மேம்படுகிறது. மன அழுத்தத்தை போக்கவும் வழிவகுக்கிறது.

News August 18, 2024

கேப்டன் பொறுப்புக்கு இவர்கள்தான் சிறந்தவர்கள்!

image

கேப்டன் பொறுப்புக்கு பவுலர்கள் மிகவும் சிறப்பான தெரிவாக இருப்பார்கள் என்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவித்துள்ளார். பவுலர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்து கொள்வதில்லை எனக் கூறிய பும்ரா, ஆடுகளத்தில் அவர்களின் பொறுப்பு மிகவும் கடினமானது எனக் கூறியுள்ளார். மேலும், கபில் தேவ் தனது பந்துவீச்சால் ஆட்டத்தை நகர்த்திச் சென்றதை யாராலும் மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

₹2 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தால்.. அதிரடி உத்தரவு

image

ஹாஸ்பிடல், ஹோட்டல்களில் ₹2 லட்சத்திற்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை கண்காணிக்க ITக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PAN எண் குறிப்பிடாமல் பெரியளவு பரிவர்த்தனை நடத்தக்கூடாது, ரொக்கமாக ₹2 லட்சத்திற்கு மேல் பரிமாற்றம் நடந்தால் அரசுக்கு தகவலளிக்க வேண்டும் என்ற விதிகளை பின்பற்றுவதில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ரொக்கப் பரிவர்த்தனையில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளது.

News August 18, 2024

பாமகவிடம் ஏன் இந்த மாற்றம்?

image

தமிழகத்தில் 3ஆவது பெரிய கட்சியாக முன்பு திகழ்ந்த பாமக, 2026 தேர்தலில் பட்டியலின பிரிவினர் ஆதரவு தந்தால் அப்பிரிவினரை முதல்வராக்கத் தயாரென அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு ஆதரவான கட்சியாக பார்க்கப்பட்ட அக்கட்சி, இவ்வாறு அறிவித்திருப்பதற்கு தேர்தல் பின்னடைவும், அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியம் என்பதை பாமக தலைமை புரிந்து கொண்டதே காரணங்கள் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News August 18, 2024

செல்வத்தை ஈர்க்கும் தாமரை மணிமாலை

image

மகாலட்சுமி வீற்றிருப்பதாக கூறப்படும் தாமரையில் உள்ள விதைகளைக் கொண்டு செய்யப்படும் மாலையான தாமரை மணிமாலைக்கு தெய்வீக குணம் உண்டு என்று ஆன்மிகம் கூறுகிறது. அந்த மாலை ஓரிடத்தில் உள்ளதெனில் அங்கு மகாலட்சுமி வருவார் எனவும், தாமரை மணிமாலை செல்வத்தை ஈர்க்கும், தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கையை அளிக்கும், நேர்மறை சக்தியை அளிக்கும் என்றும் ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் எப்போது? EC விளக்கம்

image

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள் அக்.4இல் வந்தபிறகே மகாராஷ்டிர தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுமென EC தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டசபை பதவிக்காலம் நவ. 26 முடிவடைவதால், அதற்கு தேர்தல் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் ஹரியானா, JK சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து EC விளக்கம் அளிக்கையில், அக்.4க்கு பிறகே அறிவிக்கப்படும் எனக் கூறியது.

News August 18, 2024

சதுர்த்தசியில் வழிபட வேண்டிய தெய்வம்!

image

ஆவணி சதுர்த்தசியில் (இன்று) ஆதிசக்தி அம்சமாகிய ஸ்ரீ அதர்வண பத்ரகாளிக்கு விரதமிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அசுரகுரு சுக்ராச்சாரியார் வழிபட்ட சேலம் உக்ரபிரத்தியங்கிரா கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, மிளகாய் அபிஷேகம் செய்து, ரோஜாப்பூ மாலையிட்டு, பூசணி விளக்கேற்றி, வெண்பொங்கல் படையலிட்டு, 108 சக்தி போற்றி சொல்லி வணங்கினால் வேண்டிய வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம்.

News August 18, 2024

இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு திமுக அழைப்பு

image

கருணாநிதி நினைவு நாணய வெளியிட்டு விழாவுக்கு ADMK பொது செயலாளர் இபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இபிஎஸ்க்கு நேரில் சென்று அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், கேஜி பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பாரீஸ் ஒலிம்பிக்ஸில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ➤கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ➤UPI Circle என்ற புதிய வசதியை NPCI அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு UPI கணக்கை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 5 பேர் வரை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!