news

News April 16, 2025

வன்முறைக்கு அமித் ஷாவே காரணம்: மம்தா குற்றச்சாட்டு

image

மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அம்மாநில CM மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். வன்முறைக்கு பின்னால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் BSF இருப்பதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித் ஷாவை பிரதமர் மோடி கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைப்பு அமலுக்கு வந்தது

image

கடன்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (SBI ) அடிப்படை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்து இருந்தது. இதனால் அந்த வங்கியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியோர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டியை அடிப்படை 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

News April 16, 2025

தோனி ஒரு பாகுபலி: ஹர்பஜன் சிங்

image

CSK கேப்டன் தோனியை முன்னாள் CSK வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். தோனி ஒரு பாகுபலி எனக் குறிப்பிட்ட அவர், லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் சரியான இடத்தில் பேட்டிங் செய்து அசத்தலாக விளையாடியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். CSK-க்கு தோனி கேப்டனாக வந்ததும் அனைத்தும் மாறிவிட்டது என்றும், தோனி இருக்கும்போது அனைத்தும் சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

யார் இந்த பி.ஆர்.கவாய்?

image

<<16117348>>சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார்<<>>. 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள்.

News April 16, 2025

கம்ப்யூட்டர் சயின்ஸில் இந்த கோர்ஸுக்கு தான் மவுசு ஜாஸ்தி!

image

AI, டேட்டா சயின்ஸ் துறை ஆண்டுக்கு 55% வளர்ச்சியடையும் சூழலில், B.tech Artificial Intelligence & Data Science படிப்புக்கே அதிக டிமாண்ட். 4 வருட கோர்ஸில், Artificial neural networks, Data analytics ஆகியவை கற்பிக்கப்படும். JEE தேர்வுகளின் மூலம் இந்த கோர்ஸில் சேரலாம். பிரஷருக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புவோர், இதுதான் பெஸ்ட்.

News April 16, 2025

ஜூன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்

image

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஜூன் 3-ல் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம், 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்த தினத்தில் விரிவுபடுத்தப்படும், ஜூலையில் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தாெகை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News April 16, 2025

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி கவாய்

image

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை (B.R.Gavay) நியமிக்க, மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13ஆம் தேதியோடு நிறைவடைகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின், சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்கவுள்ளார்.

News April 16, 2025

திருப்பதிக்கு போகும் பக்தர்களே.. கவனிச்சிக்கோங்க!

image

ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மேலும், அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஏப்ரல் 23 அன்று காலை 10 மணிக்கு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், முதியவர்கள் – ஊனமுற்றோருக்கான டிக்கெட்டுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வசூலை சோஷியல் மீடியா முடிவு செய்யாது: பூஜா

image

சோஷியல் மீடியாவுக்கும் ரியாலிட்டிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது என மிக அழகாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோ செய்யும் 3 கோடி பேரும் தியேட்டர்களுக்கு வருவதில்லை என கூறிய பூஜா, வசூலை வாரி குவிக்கும் பல சூப்பர்ஸ்டார்களுக்கு 50 லட்சம் பேர் கூட ஃபாலோயர்ஸ் இல்லை என உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார். பூஜா சொல்வது உண்மை தானே? கமெண்ட் செய்யுங்கள்!

News April 16, 2025

தொடர் விடுமுறை: 2,322 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்பதால், விடுமுறை. அதேபாேல், சனி, ஞாயிறும் விடுமுறை வருகிறது. இந்த 3 நாள்கள் தொடர் விடுமுறைக்கு மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 2,322 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 575 பஸ்கள், வெள்ளி, சனிக்கிழமையில் தலா 450 பஸ்கள் இயக்கப்படும் என கூறியுள்ளது.

error: Content is protected !!