India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாலை பணி திட்டத்தை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அதிமுக எம்எல்ஏ கே.பி முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் பூமி பூஜை போடுவதற்கு ஏன் அனுமதி இல்லை? என்று கேள்வி எழுப்பிய அவர், தொண்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார். அம்மாவட்டத்தை சேர்ந்த இதர அதிமுக எம்எல்ஏக்களும் அங்கு வந்ததால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாம்சங் இந்தியா நிறுவனம் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் போன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 10% பேர் வேலையை இழப்பார்கள். இதனிடையே சுங்குவார்சத்திரத்தில் அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரபல இந்தி நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தியில் ஹவுஸ்புல், கப்பார் சிங், தபாங் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மலைகா அரோரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் அஞ்சலி செலுத்தினர். அதே போல காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனையொட்டி பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐபோன் 16 சீரிஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். PM மோடியின் ‘Made in India’ திட்டம் உலகளாவிய பொருட்களை உருவாக்குவதற்கான உந்துதலாக இருப்பதாக தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் 14% ஐபோன்கள் தயாராகும் நிலையில், அடுத்த ஆண்டு இது 25%ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 5 கோடி ஐபோன்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது வளசரவாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்ற கல்லூரி மாணவரை மனோவின் மகன்கள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. காயமடைந்த கல்லூரி மாணவர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மனோவின் மகன்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய்யின் தவெக கட்சிக்கு குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரை இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் தற்போது இருக்கும் அவர்கள் 2 பேரும், தங்களுக்கு அக்கட்சியில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, குஷ்பு NCW பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து 2 பேரையும் இழுக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.
‣ வெள்ளரி விதையில் நார்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்துள்ளன. ‣ இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமப் பிரச்னைகளை சரிசெய்யும். முடிஉதிர்வைத் தடுக்கும். ‣ தைராய்டு பிரச்னையை சீராக்கும். ‣ குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். ‣ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ‣ சிறுநீர் பிரச்னைகளை சரிசெய்ய உதவும்.
iPhone 16 நேற்று அறிமுகமான நிலையில் iPhone 14, iPhone 15 ஐபோன்களின் விலை ஆப்பிள் இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளது. iPhone 15 ₹79,900 விற்கப்பட்ட நிலையில் அது ₹10 ஆயிரம் குறைக்கப்பட்டு ₹69,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் iPhone 15 Plus ₹79,900 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. iPhone 14 ₹59,900 ஆகவும், iPhone 14 Plus ₹69,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.