India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19ஆம் தேதி தனது பிறந்த நாளை, சக விண்வெளி வீரர் பெரி வில்மோருடன் விண்வெளியில் கொண்டாட உள்ளார். இருவரும் கடந்த ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். பூமி திரும்ப தாமதமாவதால் விண்வெளியில் பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இது அவரின் 2ஆவது விண்வெளி பிறந்த நாள் கொண்டாட்டமாகும்.
பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய முன்னாள் ராணுவ வீரர் ஹொகடோ ஹொடோஷே சேமா, கன்னி வெடி தாக்குதலில் தனது ஒரு காலை இழந்ததாக கூறியுள்ளார். J&K- யில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது இச்சம்பவம் நடந்ததாகவும், இனி பிறந்த குழந்தை போல் தவழ்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கும் என வருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், செயற்கை கால் பொருத்திய பிறகே உத்வேகம் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் வெயில் சதம் அடித்தது. சட்டீஸ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால், தென் இந்தியாவில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்து வருகிறது.
‘96’ படத்தின் 2ஆவது பாகத்தின் திரைக்கதை 95% முடிந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். பொதுவாகவே 2ஆம் பாகம் எடுப்பது தனக்கு பிடிக்காது எனவும், ஆனால் தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் அதிகம் பிடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். VJS மனைவியிடம் கதை சொன்னதாகவும், மேலும் VJS, திரிஷாவின் தேதிகள் கிடைப்பதைப் பொறுத்து படம் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தேச பாதுகாப்பிற்கு ராகுல் காந்தியும், அவரது கட்சியும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், அங்கு தேச விரோத பேச்சுக்களை பேசுவதாகவும், இது அவருக்கு ஒரு வழக்கமாகிவிட்டதாகவும் அமித்ஷா விமர்சித்துள்ளார். மேலும், பாஜக இங்கு ஆட்சியில் இருக்கும் வரை, இடஒதுக்கீடு மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது என்றும் கூறியுள்ளார்.
குழந்தைகளின் நாளமில்லா சுரப்பிகளில், சருமப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 4-8 வயதுடைய 630 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சன்ஸ்கிரீன், ஹேர் ஆயில், லோஷன்ஸ் உள்ளிட்ட சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்திய குழந்தைகளிடம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு பாமக, பாஜகவுக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு VCK கட்சியின் வன்னி அரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மது போதையை விட சாதிய போதையும், மத போதையும் ஆபத்தானது என்பதால் இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதிமுகவை அழைத்ததால் திமுக கூட்டணியில் முரண்பாடு என்ற தகவல் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார்.
தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. 2 படங்களுக்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதனால், அவருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டது. இந்நிலையில், ஒரு தயாரிப்பாளருக்கு படத்தை நடித்துக் கொடுக்கவும், மற்றொருவருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி கொடுக்கவும் தனுஷ் தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
இன்று 10.21 மணிக்கு பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே 1. 8 லிட்டர் 2. நியூசிலாந்து 3. பாத்திமா பீவி 4. அல்பேனியா 5. விஸ்வநாதன் ஆனந்த் 6.அயர்லாந்து. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்பப் பெற்றுள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி வாபஸ் பெற்றுள்ளார். தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என மகாவிஷ்ணு கூறியதால், அவரின் வழக்கறிஞரும் விலகினார். முன்னதாக, 2 பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.