India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கட்சியில் இருந்து விலக போவதாக சூசகமாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏராளமான அவமதிப்புக்கு பிறகு, மாற்று வழித் தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றிலிருந்து தனது வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அவர் BJPஇல் இணைவதாக தகவல் பரவியது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓரிடத்தில் சேர மம்தா அரசு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் மருத்துவரின் தாயார், “என் மகளுக்காக போராட்டம் கூட நடத்தக் கூடாதா? பாலியல், கொலை சம்பவங்களைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களை மம்தா அரசு ஒடுக்க நினைப்பது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இந்த ஆண்டுக்கான சூப்பர் ப்ளூ மூன் நாளை வானில் தோன்றவுள்ளது. ப்ளூ மூன் என்றால், நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தமில்லை. நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, பெளர்ணமி நிலவாக காட்சி அளிப்பதையே ப்ளூ மூன் என்கிறோம். சில நேரங்களில் வளிமண்டல ஒளி சிதறலால், நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதன்படி, இந்த சூப்பர் மூனை நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை இந்தியாவில் காணலாம்.
ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்த கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், தனது மகளுடன் பணிபுரியும் சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பெயர் பட்டியலை சிபிஐயிடம் பெண் மருத்துவரின் தந்தை அளித்துள்ளார். இவர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன்பேரில் அவர்களையும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
7 வகை உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கா விட்டால் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று W.H.O. தெரிவித்துள்ளது. அதாவது, சர்க்கரை, வறுக்கப்பட்ட உணவுகள், பாஸ்தா-பிரட், காபி, உப்பு, உருளை சிப்ஸ், பன்றி இறைச்சியை தவிர்க்க வேண்டுமென்று W.H.O. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உணவுகளை தவிர்க்கவில்லை எனில், உடல் பருமன், புற்றுநோய், இதய நோய், ஜீரண பிரச்னை போன்றவை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அன்புமணி, “சீருடை பணியாளர் தேர்வில் மோசடி நடந்தால், அதன் தலைவர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு அவர் பணியில் இருப்பவராக இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற டிஜிபியை என்ன செய்ய முடியும்? பொறுப்பான போலீஸ் அதிகாரிகள் யாரும் தமிழகத்தில் இல்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஆவணி மாதம் நேற்று தொடங்கிய நிலையில், நாளை முதல் பவுர்ணமி வருகிறது. இந்த நாளில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்பட, பல மாவட்ட மலைக் கோயில்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். நாளை 2.58 AM முதல், நாளை மறுநாள் 1.02 AM வரை, பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எனக் கூறியுள்ள ஆன்மிக பெரியோர்கள், கிரிவலம் செல்ல முடியாத பக்தர்கள் கோயிலுக்கு நேரில் சென்று வழிபடலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தாவில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. KG கர் மருத்துவனையில் பயிற்சி பெற்று வந்த அவர், கடந்த 9ஆம் தேதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கை SUMOTO கேஸாக எடுத்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, நாளை மறுநாள் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
திமுக – பாஜக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாக இபிஎஸ் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறீர்கள். அதை ராகுல்காந்தியை வைத்து வெளியிடாமல், ஏன் ராஜ்நாத் சிங்கை வைத்து வெளியிடுகிறீர்கள்? ஆளுநரின் தேநீர் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டாரே ஏன்? இதை வைத்து பார்த்தால், திமுக – பாஜக இடையேயான ரகசியக் கூட்டணி அப்பட்டமாக தெரியும்” எனக் கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை ₹1,000 குறித்த வதந்தியை, மக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடப்பதாக சோஷியல் மீடியாவில் வெளியான செய்தியை நம்பி, பெண்கள் பலர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர். இதுகுறித்து பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்புவதால், அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.