India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்போது அறிமுகமாகியுள்ள ஆப்பிள் சீரிஸ் 10 வாட்ச்களில் ஒரு மருத்துவ ஆய்வகமே இருக்கிறது என்று சொல்லலாம். இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன், பல்ஸ் ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்கும் சென்சார்கள் இதில் உள்ளன. மேலும், தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலை கண்டறிந்து, எச்சரிக்கை மணி எழுப்பும் சூப்பர் தொழில்நுட்பமும் இதில் உள்ளது. தூங்கும் போது நிகழும் மூச்சுத்திணறலே பெரும்பாலான மரணங்களுக்கு காரணமாக உள்ளது.
*மேஷம் – பாராட்டு கிடைக்கும் *ரிஷபம் – வெற்றி அமையும் *மிதுனம் – நலம் பெறுவீர் *கடகம் – பரிசு கிடைக்கும் *சிம்மம் – சாந்தம் நிலவும் *கன்னி – கீர்த்தி கிடைக்கும் *துலாம் – உதவி கிடைக்கும் *விருச்சிகம் – போட்டி உண்டாகும் *தனுசு – ஆர்வம் *மகரம் – பக்தி உண்டாகும் *கும்பம் – நன்மை ஏற்படும் *மீனம் – மேன்மை உண்டாகும்
விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி நடைபெற இருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறொரு தேதியில் மாநாட்டை நடத்திக் கொள்வதாக விழுப்புரம் போலீசாருக்கு தவெக தரப்பில் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேதி மாற்றம் குறித்து நாளை விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ITI சேர விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ₹14,000 ஊக்கத்தொகையுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MMV, மெக்கானிக் டீசல், எலக்ட்ரீசியன், ஆட்டோ எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர், பெயிண்டர் ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 26ஆம் தேதிக்குள் குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம்.
திமுக நிகழ்ச்சியில் இன்று பேசிய துரைமுருகன், “இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும்” எனத் தெரிவித்தார். திமுகவில் சீனியர் அமைச்சர்கள் புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என உதயநிதி அண்மையில் பேசியிருந்தார். மேலும், முதல்வர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என பேசப்படும் நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.
தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று நடந்த 100மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபிநயா ராஜராஜன் தங்கம் வென்றுள்ளார். அதே பிரிவில் இந்திய வீராங்கனை சுதீக்ஷா வெள்ளி வென்றுள்ளார். செப்.13 தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
மலையாள சினிமா துறையில் பாலியல் தொல்லை குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலிவுட் நடிகை சன்னி லியோன், “NO சொல்ல வேண்டிய இடத்தில் NO சொல்ல வேண்டும், வெளியேற வேண்டிய இடத்தில் வெளியேற வேண்டும். அதற்காக எத்தகைய இழப்புகள் வந்தாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.
மருத்துவ காப்பீட்டு தொகை சரியான நேரத்தில் கிடைக்காததற்கான ஒரு சில காரணங்கள்: *பெயர், வயது, வருவாய் தொடர்பாக தகவல்கள் தவறாக இருப்பது *ஏற்கனவே இருக்கும் நோய் அல்லது பரம்பரை நோய் குறித்து முன்பே கூறாமல் இருப்பது *புகைத்தல், மதுபழக்கம் இருப்பது குறித்து கூறாமல் இருப்பது *பீரிமியம் தொகை செலுத்தாமல் இன்ஷூரன்ஸ் காலாவதியானால் காப்பீட்டை பெற முடியாது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இத்தொடர் மூலம் இந்தியாவில் 1.39 பில்லியன் டாலர் (ரூ.11,637 கோடி) வர்த்தகம் நடைபெற்றதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் பார்க்க வந்த வெளிநாட்டவர்களால் விடுதி, உணவு, போக்குவரத்து ஆகியவற்றில் அதிக வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.
தவெக-வின் மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பை நாளை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் செப்.23ல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி பெறுவதிலேயே தாமதம் ஆனதாக தெரிகிறது. மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், தேதி மாறலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு விஜய் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.