India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ‘ரெட்ரோ’, ‘ஜனநாயகன்’ என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள அவர் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுகுறித்து பேசியவர் ரஜினி சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் ஸ்பெஷல் என தெரிவித்துள்ளார். கூலி படத்தில் தான் ஆடிய நடனம் ‘காவாலா’ போன்று இல்லாமல் வேறு வைப்பில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாக பள்ளிக்கூடங்கள் மாறியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட – ஒழுங்கு சீர்கெட்டு நிற்பதற்கான சான்றுதான் பாளையங்கோட்டை பள்ளியின் கொலைவெறித் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் சீமான் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
RSS, BJP-ஐ தோற்கடிக்கும் பாதை குஜராத்தில் இருந்து தொடங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் நிர்வாகிகளிடையே பேசிய அவர், RSS – காங். இடையே இருப்பது அரசியல் சண்டை மட்டுமல்ல, கொள்கை சண்டை எனவும், கட்சியில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காங். கட்சியால் மட்டும்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’ அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக படக்குழு பாங்காக் சென்றுள்ள நிலையில் அங்கு சத்யராஜ், அருண்விஜய், பார்த்திபன் இருக்கும் புகைப்படம் வைரலாகிறது.
இந்து அறநிலையத்துறையை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற சட்டம் இருக்கும்போது வக்ஃப் வாரியத்துக்கு மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வக்ஃப் சொத்துகள் எவை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் பரபரப்பு உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. வக்ஃப் வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருக்கலாம் என்றும் மற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்றும் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், விரிவான பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவாரூர், நீலகிரி & தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் & ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில், மேல் விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஐகோர்ட் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தற்போது கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநில அதிமுக செயலாளர் ஜி. சோபகுமார் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜி. சோபகுமார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.