news

News September 17, 2024

இந்தியா வரலாற்று வெற்றிபெற்ற நாள்

image

கடந்த ஆண்டு இதே நாளில் (செப்.17) Asia Cup இறுதி போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த SL 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. Asia Cup இறுதி போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரன் இதுவாகும். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News September 17, 2024

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவரா?

image

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நம்பியவர்களை எந்தக் காலத்திலும் கைவிட மாட்டீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துக்காட்டுவீர்கள். கோபமோ, சந்தோஷமோ உடனே வெளிப்படுத்திவிடுவீர்கள். தெய்வ நம்பிக்கை, கற்பனை வளம் உங்களிடம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.

News September 17, 2024

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா

image

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறை இந்த ஆட்சியிலேயே அமல்படுத்தப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் உறுதியளித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், அமித் ஷாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News September 17, 2024

சொத்து வரி 6% உயர்வு?

image

2025-26ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் முதல்) வீடு, வணிக கட்டடங்கள் உள்ளிட்டவைகளுக்கான சொத்து வரியை 6% உயர்த்த, தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. சொத்து வரி உயர்ந்தால், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். இது மட்டுமல்லாமல், வணிகர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

News September 17, 2024

அவருடன் மோதுவது மிகவும் பிடிக்கும்: லாபுசாக்னே

image

ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுடன் மோதுவதை தான் ரசிப்பதாக ஆஸி., பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னே மனந்திறந்து கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய அவர், “நாங்கள் 2015 – 16ஆம் ஆண்டில் MRF அகாடமியில் இருந்தோம். அப்போதுதான் நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடினோம். அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த அன்பு, ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்வது என அனைத்தும் இருக்கிறது” என்றார்.

News September 17, 2024

லட்சங்களை கொட்டிக் கொடுக்கும் 4 மொழிகள்..!

image

இன்றைய காலச்சூழலில் சில வெளிநாட்டு மொழிகள் தெரிந்திருந்தாலே, லட்சங்களில் சம்பளம் பெற முடியும். 1. German (பொறியியல், மருத்துவத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் மொழி). 2. Japanese (ஜப்பானுடன் எண்ணற்ற தொழில் ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது). 3. Mandarin Chinese (இந்தியா – சீனா இடையே வலிமையான வர்த்தக உறவு நிலவுகிறது) 4. Spanish (ஸ்பெயின் நிறுவனங்கள் இந்தியாவில் குவிந்து வருகின்றன)

News September 17, 2024

நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் சென்னை வருகை

image

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் தமிழகம் வந்தனர். இதில் கோயம்புத்தூரை சேர்ந்த 2 பேர், பெங்களூரை சேர்ந்த 2 பேர் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த 13 பேர் என அனைவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினர். இன்று மாலை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 13 பேர் நாளை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வருகின்றனர்.

News September 17, 2024

வட்டி விகிதம் எவ்வளவு குறையும்?

image

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்பை உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். FOMC கூட்டத்திற்குப் பின் ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகிதத்தை 50 bps புள்ளியாக குறைக்கலாம் என ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது. சந்தையின் குறுகிய கால செயல்பாட்டை இதன் மூலம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால், உலக பங்குச் சந்தைகள் விண்ணை முட்டும் என்பது உறுதி.

News September 17, 2024

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்..!

image

பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் விஜய். தமிழ் தேசியத்தை கையில் எடுத்த சீமானும், மைய அரசியல் (Centre Politics) பேசிய கமல்ஹாசனும் ஒரு இடத்திற்கு மேல் நகர முடியாமல் தேங்கியதை பார்த்து, விஜய் பாடம் கற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க, திராவிட சித்தாந்தமே சிறந்த வழி என்பதே அவர் கற்றுக்கொண்ட முதல் அரசியல் பாடமாக இருக்குமோ?

News September 17, 2024

‘தூம்-4’ படத்தில் வில்லனாக நடிக்கும் சூர்யா?

image

‘தூம்-4’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சூர்யாவிடம் அப்படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சூர்யா ஒப்புக்கொண்டால், ‘தூம் 4’ அவரது 2ஆவது இந்தி படமாக அமையும். இதற்கு முன்பு அக்சய் குமார் நடிப்பில் வெளிவந்த ‘சர்பிரா’வில் கேமியோ ரோலில் அவர் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!