India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய நெடுஞ்சாலையில் 20 kmக்குள் பயணிப்பவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Fast Tag முறைக்கு மாற்றாக சேட்டிலைட் உதவியுடன் செயல்படும் GNSS முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், நேஷனல் பர்மிட் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள், 20 kmக்குள் பயணித்தால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இது குறித்து உங்களோட கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
முந்திரி பருப்பின் பயன்கள் குறித்து மருத்துவர்கள் சில பரிந்துரை அளித்துள்ளனர். அவை என்னென்ன? 1) எலும்புகளை வலுப்படுத்த உதவும் 2) தசைப்பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, மயக்கத்தை சரி செய்ய உதவும் 3) ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 4) மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும் 5) காசநோய் மற்றும் தொழுநோய்களை குணப்படுத்தக்கூடும். இந்தத் தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். நண்பர்களுக்கும் இதை பகிருங்க
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்ய அழைப்பது ஏன்? என CM ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை என்ற தனிச்சட்டம் நிறைவேறுவது எப்போது? என வினவியுள்ளார். மேலும், பிற மாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவை மாநாட்டிற்கு அழைப்பது விசிகவின் விருப்பம் என அமைச்சர் உதயநிதி பதில் அளித்துள்ளார். விசிகவின் பூரண மதுவிலக்கு மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக, அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பதா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவனிடம்தான் கேட்க வேண்டும் என உதயநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மே.வங்க மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெண் பயிற்சி மருத்துவர் கொலையைக் கண்டித்தும், மருத்துவ சுகாதாரத் துறை செயலாளரை மாற்றக் கோரியும் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டும் மருத்துவர்களை இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப SC நேற்று உத்தரவிட்டது.
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை அருகே நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) சென்றுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் & இயக்குநர் AR முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ள நிலையில், காஜல் என்ன வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய iPhone பயனர்கள் iOS 18ஐ வரும் 16ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பதிவிறக்கம் செய்ய முடியும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று அறிமுகமான நிலையில், செப்.20ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக புதிய OS பதிப்பை ஆப்பிள் களம் இறக்குகிறது. Apple Intelligence அம்சங்கள் கொண்ட இந்த OS, iPhone 11 வரையிலான போன்களில் சப்போர்ட் ஆகும்.
PM மோடியை விமர்சித்ததாக காங்கிரஸ் எம்பி சசிதரூருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிவலிங்கம் மீதிருக்கும் தேள் என்று மாேடியை சசிதரூர் விமர்சித்ததாக பாஜக நிர்வாகி ராஜீவ் பாப்பர் வழக்குத் தொடுத்தார். இதன்மீது கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதை எதிர்த்து சசிதரூர் தொடுத்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சுவாச குழாய் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், அவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.