news

News September 10, 2024

வெள்ளி விலை ₹1,000 உயர்வு

image

1 கிலோ வெள்ளி விலை ₹1,000 உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹90க்கும், 1 கிலோ வெள்ளி விலை ₹90,000க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹91ஆக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளி விலை ₹1,000 அதிகரித்து ₹91,000க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ₹6,680க்கும், சவரன் தங்கம் ₹ 53,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT

News September 10, 2024

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹15 லட்சம் வரை கடன்

image

மகளிர், ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கு, சிறுதொழில் மற்றும் வணிகத்துக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பாெருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் ₹15 லட்சம் வரை கடன் அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக ₹1.25 லட்சம் வரை கடனாகப் பெறலாம். இதற்கு ஆண்டு வட்டி 6% என்றும், திரும்ப செலுத்தும் காலம் இரண்டரை ஆண்டுகள் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

News September 10, 2024

மாவட்ட கல்வி அலுவலர்களின் டிரான்ஸ்பரில் திருத்தம்

image

பள்ளிக் கல்வித்துறையில் 3 மாவட்ட கல்வி அலுவலர்களின் டிரான்ஸ்பரில் மாற்றம் செய்து TN அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தஞ்சையில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்ட ரவிச்சந்திரன், தற்போது திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு மாற்றப்பட்ட ரமா, தற்போது குமரிக்கும், நீலகிரியில் இருந்து திருப்பூருக்கு மாற்றப்பட்ட கோமதி, தற்போது கோவைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 10, 2024

விராட் கோலி விஸ்வரூபம் எடுப்பார்: பாசித் அலி

image

BAN எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விஸ்வரூபம் எடுப்பார் என பாக். முன்னாள் வீரர் பாசித் அலி கணித்துள்ளார். ரோஹித் சர்மா, கில், ஜெய்ஸ்வாலை காட்டிலும் கோலியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்றும், அவர் இரட்டை சதமடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் 19ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

News September 10, 2024

டிட்டோஜாக் சார்பில் இன்று ஆசிரியர்கள் போராட்டம்

image

டிட்டோஜாக் அமைப்பு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அரசாணை 243 நீக்கம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட விரும்பாத ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி போராட்டத்திற்கு அழைக்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

News September 10, 2024

வெள்ளையன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

image

வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று உள்ளிட்டவற்றுக்கு சில ஆண்டுகளாக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை திடீரென பாதிக்கப்படவே கடந்த 3ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண வார்டில் முதலில் அனுமதிக்கப்பட்ட அவர், 5ஆம் தேதி ICU-க்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News September 10, 2024

பங்குச்சந்தையில் IPO என்றால் என்ன?

image

ஆரம்ப பொது வழங்கல் (<<14064794>>IPO<<>>) என்பது மூலதனத்தை திரட்டுவதற்காக நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் செயல்முறையை குறிக்கிறது. கொடுக்கப்பட்ட கால அளவில் முதலீட்டாளர்கள் IPOக்கு அப்ளை செய்யலாம். அவ்வாறு அப்ளை செய்வதை சப்ஸ்கிரைப் என்கிறோம். IPO நிறைவடைந்ததும், சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு பங்குகள் வழங்கப்படும். பிறகு, பங்குச்சந்தையில் மற்ற பங்குகளை போல அவை வர்த்தகமாக தொடங்கும்.

News September 10, 2024

விஜய் கட்சியால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் இல்லை : H. ராஜா

image

விஜய் கட்சியால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள TVK கட்சி பாஜகவுக்கு போட்டியாக இருக்குமா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், பாஜக தமிழகத்தில் தேசிய கட்சியாக உள்ளது, தேசிய எண்ணம் கொண்ட வாக்காளர் விருப்பங்களை பூர்த்தி செய்கிறது என்று கூறினார். விஜய் கட்சி, பாஜகவுக்கு போட்டி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

News September 10, 2024

பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

image

சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கையை பரப்பும் விதமாக பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். அதேபோல, கோவையில் மருத்துவ முகாமின் போது பள்ளி மாணவியிடம் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையடுத்து, பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒரு வாரத்துக்குள் வகுக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

News September 10, 2024

யூடியூப் சேனல்களுக்கு அதிரடி ‘செக்’

image

யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்கள் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் பல பொய் செய்திகளும், வதந்திகளும் காட்டுத் தீயாக பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில், இதற்கு ‘செக்’ வைக்கும் வகையில் யூடியூப் உள்ளிட்ட இணைய ஊடகங்களை முறைப்படுத்த புதிய ஒளிபரப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

error: Content is protected !!