India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை ₹32 கோடிக்கு விற்றுள்ளார். 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 2017ம் ஆண்டு ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார். அவர் நடித்த கடைசி சில படங்கள் தோல்வி அடைந்ததால், ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக அவர் வீட்டை விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்நிலையில், வரும் 15ஆம் தேதி திருவோணம் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறக்க உள்ளார். சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் 15, 16 ஆகிய தேதிகளில் ஓணம் விருந்து (சத்யா) வழங்கப்படும்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் (93) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் பிரபல STAR WARS படங்களின் டார்த் வேடர் கதாபாத்திரம் மற்றும் 90களில் வெளியான LION KING படங்களில் முஃபாசா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இவருக்கு 2011இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஆஸ்கர் அகாடமி கௌரவித்துள்ளது. இவரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆஸி. அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடிய போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் உருவெடுப்பார் எனக் கூறிய அவர், காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்குள் வருவதை காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
TN பள்ளிக் கல்வித்துறையின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியாகியுள்ளது. இதில், நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 220ஆக உள்ள வேலை நாள்களை குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதை ஏற்ற பள்ளிக் கல்வித்துறை 210 வேலை நாள்களாக குறைத்து திருத்தப்பட்ட நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆன்லைன் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 2015இல் புலிட்சர் விருது பெற்றவர் மதுரைத் தமிழன் பழனி குமணன் நெடுமாறன். மென்பொருள்துறை, தகவல் பரிமாற்றம், இதழியல் குறித்தான பணிகளில் புதிய வடிவமைப்புகளைக் கண்டறிந்து அதற்கான உரிமங்களை அவர் பெற்றிருக்கிறார். கொலம்பியா பல்கலை., உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் ஆய்வுரைகளை நிகழ்த்தி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.
பங்கு சந்தையில் லாபகரமான வர்த்தகராக இருக்க விரும்புபவர்கள் வர்த்தகத்திற்கான நேரத்தை பொழுதுபோக்காகவோ,வேலையாகவோ அல்லாமல் தொழிலுக்கான போர்க்களமாக கருத வேண்டும். போட்டி நிறைந்த சந்தை நிலவரத்தை கண்காணிப்பது, பகுப்பாய்வு அணுகுமுறையை கையாள்வது, தொழில்நுட்பங்களை (Charting Sites) பயன்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். வேடிக்கையாக வணிகம் செய்வது ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்களது தயாரிப்பு படங்களுக்கு காஸ்டிங் ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை என்றும், ஆதலால் தங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது. ராஜ்கமல் பட நிறுவன பெயரில் மோசடியில் ஈடுபடுவாேர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
1) சீனாவின் புனித விலங்கு எது? 2) குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 3) சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்? 4) தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது? 5) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது? 6) காந்தி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ? 7) PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
மின்சார வாகனங்களுக்கு (EV) நிதி அமைச்சகம் மானியம் கொடுப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லையென, நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். EVக்கு மானியம் தேவையில்லை என அவர் பேசியது சர்ச்சையான நிலையில், லித்தியம் அயன் பேட்டரி விலை குறைந்ததாலும், EV உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், 2 ஆண்டுகளில் EV விலை பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக இருக்கும் என்றார்.
Sorry, no posts matched your criteria.