India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன், அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க கோரி ஐநாவை நாடியுள்ளார். ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோவிற்கு எழுதிய கடிதத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னத்தில் மாற்றம் செய்வது சர்வதேச விதிகளை மீறுவதாகும், எனவே கல்லறையை பாதுகாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி யாகூப் வலியுறுத்தியுள்ளார்.
கிரகங்களின் இளவரசரான புதன், நேற்று மீன ராசிக்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த ராசியில் ஏற்கெனவே சனியும், சுக்கிரனும் பயணித்து வருகிற காரணத்தால், சனி சுக்கிர புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இதனால், திரிகிரஹ யோகம் ஏற்பட்டு, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளுக்கு பணமழை பெய்யவுள்ளது. இவர்களுக்கு இருக்கும் நிதி நெருக்கடியும் தீரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக தன்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுவதாக முன்னாள் SC நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம் எனவும், இந்த பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என CM ஸ்டாலினிடம் வேண்டுகோளாக வைத்ததை அவரும் ஏற்றுக் கொண்டதாக குரியன் கூறியுள்ளார்.
RR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், DC அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எவ்வளவு அதிரடி என்றால், வெறும் 2 ஓவர்களில் 33 ரன்கள் குவித்திருக்கும் அளவுக்கு அதிரடி. முதல் ஓவரில் McGurk அடித்த 2 பவுண்டரியால் DC 10 ரன்கள் குவித்தது. இரண்டாவது ஓவரில், அபிஷேக் பொரேல் 4, 4, 6, 4 , 4, 1 என 23 ரன்கள் குவித்தார். இந்த ஓவரை வீசியவர் தேஷ்பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட் சீமான் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள், தெற்கு கலிஃபோர்னியாவின் பொமோனாவில் உள்ள மைதானத்தில் நடக்கும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த மைதானம், 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 அணிகள் 2028 ஒலிம்பிக்ஸில் மோத உள்ளன.
தனியார் விமான பைலட் சாய் ரோஷன் ஷியாம் என்பவருடன் நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘Now and Forever’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘அவன் இவன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜனனிக்கு, ‘தெகிடி’ படம் கெரியரின் முக்கிய படமாக அமைந்தது.
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய IPL போட்டியில், RR அணியுடன் DC அணி மோதுகிறது. இதில், டாஸ் வென்ற RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், DC அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். நடப்பு சீசனில் வலுவான நிலையில் இருக்கும் DC அணி, இப்போட்டியில் வென்றால் முதலிடத்திற்கு முன்னேறும். அதேநேரம், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் RR அணி, மீண்டு எழ முயற்சி செய்து வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனையடுத்து, வேந்தராக முதல்வர் இன்று கூட்டத்தை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.