news

News September 10, 2024

தவறாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

இணைய பணபரிவர்த்தனை செய்யும் போது தவறாக வேறொருவருக்கு பணம் அனுப்பிவிட்டால் அதனை எளிய முறைகள் மூலம் திரும்பப் பெறலாம். தவறாக பணம் அனுப்பினால் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடியாக அந்த நபரைத் தொடர்புகொண்டு திருப்பி அனுப்புமாறு கேட்கலாம். அல்லது பணம் செலுத்திய செயலில் உதவி கோரலாம். இவைகள் மூலமும் பணம் திரும்ப பெறவில்லை எனில் NPCI இல் தொடர்புகொள்ளலாம் அல்லது போலீசில் புகாரளிக்கலாம்.

News September 10, 2024

தமிழை காக்க உறுதியாக இருக்கிறோம்: அன்பில் மகேஷ்

image

எஸ்.எஸ். திட்டத்தில் நிலுவையில் உள்ள நிதியை NEP நிபந்தனைகள் இன்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என தர்மேந்திர பிரதானின் பதிவை டேக் செய்து, அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. அதேசமயம், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எப்பொழுதும் உறுதியாக உள்ளோம். தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா என்றும் கேள்வியுள்ளார்.

News September 10, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகர் நலனுக்கு தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். அவரின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் வணிக பெருமக்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

News September 10, 2024

மனுவுக்கு CURVV EV SUV கார் பரிசளித்த TATA

image

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு, TATA நிறுவனம் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார். மேலும், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரது வரலாற்று சாதனையை கவுரவிக்கும் வகையில், TATA நிறுவனம் சார்பில் CURVV EV SUV கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

IDBI வங்கியில் வேலை.. உடனே விண்ணப்பிங்க

image

IDBI வங்கி கிளைகளில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 56 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதியாக MBA பட்டம் வாங்கி இருக்க வேண்டும். வயது வரம்பு 25-40 வரை ஆகும். மாத சம்பளம் ₹1.57 லட்சம் வரை வழங்கப்படும். வேலையில் சேர விரும்புவோர் IDBI வங்கி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு செப் 15 கடைசி நாள். SHARE IT

News September 10, 2024

போனா வராது பொழுது போனா கெடைக்காது

image

8ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு JIO அறிவித்த ஆஃபர்கள் இன்றுடன் முடிகிறது. இதில் ₹899, ₹999, ₹3,599க்கு ரீசார்ஜ் செய்தால் ₹700 வரை சலுகைகள் கிடைக்கும். குறிப்பாக ₹2999க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 3 மாத ZOMATO கோல்டு மெம்பர்ஷிப் இலவசம். இதுதவிர ₹899 ரீசார்ஜ்-2 GB/d (90D). ₹999 ரீசார்ஜ்-2 GB/d, (98D). மேலும் ₹899, ₹999 ரீசார்ஜுக்கு 10 GB Free டேட்டா, 10 OTT தள Free சப்ஸ்கிரிப்ஷன்.

News September 10, 2024

ஆப்பிள் ஈவென்ட்டில் சித்தார்த்-அதிதி ராவ் தம்பதி

image

ஆப்பில் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரியஸ், புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் தமிழ் திரை பிரபலங்களான சித்தார்த் – அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிதி, டிம் – குக்கிற்கு நன்றி எனவும், இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

image

தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கீடு செய்து, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில், 22,061 சிறுபாசன ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தில், முதற்கட்டமாக 5,000 நீர்நிலைகள் புனரமைக்கப்படவுள்ளன.

News September 10, 2024

கிரீன் டீயின் நன்மைகள்

image

ஒரு நாளில் 2-4 கப் கிரீன் டீ குடிப்பது உடலிற்கு அதிக நன்மை அளிக்கிறது. இது உடலில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக்கவும் கிரீன் டீ உதவுகிறது. மூளை ஆரோக்கியத்திலும் பங்காற்றுகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கும் திறன் பெற்றது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் செய்கிறது. கிரீன் டீயினை எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

News September 10, 2024

லோன் ஆப் பற்றிய விழிப்புணர்வு அவசியம்!

image

நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தற்போது ஆப்களில் அதிகம் கடன் வாங்கி வருகின்றனர் ஆனால் இது போன்ற ஆப்களை பற்றிய முன்னெச்சரிக்கை அவசியம் தேவைப்படுகிறது. அந்த ஆப்கள் RBI யில் பதிவு செய்திருக்கிறதா என விசாரிக்க வேண்டும். அந்த ஆப்களை 50ஆயிரம் மேல் பதிவிறக்க செய்திருந்தால் அதைப் பயன்படுத்தலாம். கடன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வாடிக்கையாளர் சேவை உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

error: Content is protected !!