India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மேஷம் – நலத்துடன் இருப்பீர் *ரிஷபம் – பெருமையான நாளாக அமையும் *மிதுனம் – மறதி ஏற்படும் *கடகம் – புதிய நட்பு உருவாகும் *சிம்மம் – அமைதியான நாளாக அமையும் *கன்னி -சாந்தமாக இருங்கள் *துலாம் – கஷ்டமான நாளாக இருக்கும் *விருச்சிகம் – நன்மை உண்டாகும் *தனுசு – கோபம் ஏற்படும் *மகரம் – புகழ் உண்டாகும் *கும்பம் – சாதனை படைப்பீர் *மீனம் – இன்பமான நாளாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஐபோன் 16 இதற்கு முந்தைய மாடலான 14,15 சீரிஸை போலவே இருப்பதாகவும், பின்னால் இருந்த 3 கேமராக்களில் ஒரு கேமராவை மட்டும் எடுத்துவிட்டு புதிய மாடல் என மாறுவேடத்தில் முகத்தில் மரு வைத்தது போல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள 405 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். பராமரிப்பு தொழிற்பழகுநர் – 279 பணியிடங்கள். மீதமுள்ள 126 பணியிடங்கள் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் போன்ற வேலை தெரிந்தவர்களுக்கு. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளவும், காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் <
ஹரியானா MLA தேர்தலில் வினேஷ் போகத்தை எதிர்த்து, யோகேஷ் பைரகி போட்டியிடுவார் என BJP அறிவித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட VB, மல்யுத்தத்திலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து, ஜூலானா தொகுதி வேட்பாளராக VB அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து பைரகி போட்டியிடுவார் என BJP அறிவித்துள்ளது. இவர், ஏர் இந்தியா விமானத்தின் X பைலட் ஆவார்.
+2 தேர்வை தனித்தேர்வராக எழுதியவரும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குடும்ப சூழல் காரணமாக +2வில் தமிழ் வழியில் படித்த சத்யா, குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தார். ஆனால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டில் அவர் பெயரை சேர்க்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகளை இறுதி செய்வதற்காக இயக்குநர் வெற்றிமாறன் விரைவில் லண்டன் புறப்பட்டுச் செல்ல உள்ளார். இப்படத்தில் வரும் காளை தொடர்பான காட்சிகளை பல லட்சம் செலவில் அனிமேஷனில் படக்குழு வடிவமைத்து வருகிறது. டிசம்பர் மாதம் ‘விடுதலை 2’ திரைப்படம் வெளியான பிறகு ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் “காதல் நகரம்” என்ற தனது நீண்ட கால அந்தஸ்தை இழந்தது பாரிஸ். TALKER RESEARCH நிறுவனம் நடத்திய ஆய்வில் ஹெவாயில் உள்ள மெளயி என்ற தீவு, காதல் நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மெளயி தீவுக்கு 34%, பாரிஸ்-க்கு 33% பேரும் வாக்களித்துள்ளனர். அதிகம் அறியப்படாத இடம்தான் காதலுக்கு உகந்ததாக இருப்பதாக 45% அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது வலது காலில் பெரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக விஜய் டிவி பிரபலம் டிடி தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், 10 ஆண்டுகளின் தனது 4வது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளதாகவும், இந்தமுறை சிசிக்சை வெற்றியடைந்து மீண்டும் தன்னால் நடக்க முடியும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பத்திற்கான கடைசி தேதி வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. www.hajcommittee.gov.in என்ற இணையத்தளம் வழியாக (அல்லது) “HAJ SUVIDHA” செயலில் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இரத்து செய்யப்பட்ட காசோலை நகல்/சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல். முகவரிச் சாற்றின் நகல் ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் டோர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தத் தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இளம் வயதினரை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டிலேயே இந்தத் தடை அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார். இந்த சட்டம் இந்தியாவில் வந்தால் எப்படி இருக்கும்.
Sorry, no posts matched your criteria.