news

News September 11, 2024

பொங்கல்: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

image

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கவுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்கிவிடும். அதன்படி பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 11க்கு பயணிப்போர் நாளை மறுநாளும், ஜனவரி 12க்கு வருகிற 14ம் தேதியும், ஜனவரி 13க்கு வரும் 15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

News September 11, 2024

ஃபோர்டு அதிகாரிகளுடன் CM பேச்சுவார்த்தை

image

USAவில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், TNஇல் அந்நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும், 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 11, 2024

சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி

image

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என Nutritionist கூறுகின்றனர். இது மலச்சிக்கல் பிரச்னையை தடுப்பதுடன் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவும். பளபளப்பான சருமம், இளமையை பராமரிக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு பப்பாளியில் காணப்படும் வைட்டமின் சி உதவுகிறது. Share it.

News September 11, 2024

தெற்காசிய தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

image

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 13ஆம் தேதிவரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 62 பேர் பங்கேற்கிறார்கள். 1995க்கு பிறகு சென்னையில் நடைபெறும் முதல் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுதான். தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை போட்டி நடைபெறும்.

News September 11, 2024

JOBS ALERT : சென்னை வருமான வரி ஆணையத்தில் வேலை

image

சென்னை, புதுச்சேரியில் உள்ள வருமானவரி ஆணையத்தில் கேன்டீன் அட்டெண்டன்ட் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 25 இடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத சம்பளம் ₹18,000 – ₹56,900 ஆகும். கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இதற்கு இம்மாதம் 22ம் தேதி வரை tnincometax.gov. in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை பிறருக்கும் பகிருங்க.

News September 11, 2024

பக்தர்களுக்கு செல்வ வளம் அருளும் ஏகாம்பரேஸ்வரர்

image

குபேர தரிசனம் செல்வ வளங்களை அள்ளித்தந்து,
முன்னேற்றத்தை தரும் என்கின்றன ஞானநூல்கள். எனில், ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரிய ஆச்சரியம். அப்படியான அற்புத ஆலயம் திருச்சிக்கு அருகில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ராசிக்கு ஒருவர் என 12 குபேரர்கள் அருள் பாலிக்கிறார்கள் இங்கு, காமாட்சி அம்பாளுடன் ஏகாம்பரேஸ்வரர் அழகுறக் கோயில் கொண்டுள்ளார்.

News September 11, 2024

எல்லையில் பாகிஸ்தான் படையினர் திடீர் அத்துமீறல்

image

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்னூர் பகுதியில் அதிகாலை 2.35 மணியளவில் பிஎஸ்எப் நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து பதிலுக்கு இந்திய படையினரும் திரும்பி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பாக். படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்திக் காெண்டனர்.

News September 11, 2024

5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க பரிந்துரை

image

சென்னை HCக்கு 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க SC கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஏப்ரல் மாதம் சென்னை HC கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு ஆளுநரும், முதல்வரும் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது SC கொலீஜியமும் பரிந்துரைத்துள்ளது.

News September 11, 2024

கிங் மேக்கர் அல்ல, கிங் ஆக விரும்பும் ஜென் Z

image

ஜென் Z தலைமுறை பிறரிடம் வேலை செய்வதை விட, சொந்தமாக தொழில் தொடங்கவே விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. Santander UK என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 77% பேர் சொந்த தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளனர். அதிலும், 39% பேர் ஸ்மார்ட்போன்கள் மூலம் வணிகம் செய்ய விரும்புகின்றனர். இது ஜென் X மற்றும் பூமர் தலைமுறையுடன் ஒப்பிடும்போது அபரிமிதமான மாற்றமாகும்.

News September 11, 2024

கல்லூரிகளில் ஆன்மிக பாடப்பிரிவா? தி.க. எதிர்ப்பு

image

அறநிலையத்துறை கல்லூரிகளில் ஆன்மிக பாடப்பிரிவுகளை ஏற்க முடியாது என தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை பணி குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அறநிலையத்துறை கல்லூரிகளில் கந்தசஷ்டி பாட வைப்பதை நியாயப்படுத்த முடியாது. தனது விமர்சனம் குறித்து அறநிலையத்துறையே முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!