India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
USA துணை அதிபர் ஜேடி வான்ஸ், வரும் 18 முதல் 24-ம் தேதிகளில் இந்தியா மற்றும் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இருநாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜேடி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளுடன் இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சவுதி அரசிடம் இதுகுறித்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் பறந்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 100 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 3,322 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது, நேற்றைய விலையை விட 3.1% அதிகமாகும். இதனையடுத்து, நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,000 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் RR அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது DC அணி. டாஸ் வென்ற RR கேப்டன் சஞ்சு சாம்சன், DC அணியை பேட்டிங் செய்யப் பணித்தார். இதனையடுத்து, களமிறங்கிய DCயின் தொடக்க வீரர் பொரேல் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் குவித்தார். பின்னர், ராகுல், அக்சர் ஆகியோரின் அபார பேட்டிங்கால், DC அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.
பாஜகவில் இருந்து பிரிந்தாலும், உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிட மாட்டேன் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை தான் ஏற்கவில்லை எனவும், சிவசேனா இல்லாமல், பாஜகவால் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள காங்., திமுக இந்துத்துவாவை எதிர்த்து வரும் நிலையில், தாக்கரே தொடர்ச்சியாக ஆதரித்து பேசிவருகிறார்.
ஹோண்டா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட Dio 125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் விலை ₹96,749 மற்றும் ₹1.02 லட்சமாக (Ex- Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இது ₹8,798 அதிகமாகும். LCD ஸ்க்ரீனுக்கு பதிலாக 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, ப்ளூடூத், நேவிகேசன், மொபைல் அழைப்பு, மெசேஜ் அலெர்ட், USB Type C சார்ஜிங் என பல வசதிகளை கொண்டுள்ளது.
+1, +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளியும் ஏப்ரல் 20ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இடையில் 19ஆம் தேதி மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால், அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள், உடன் பணியாற்றியவர்களுடன் பேசுவதை தவிர்த்ததற்கு நடிகை நஸ்ரியா மன்னிப்பு கேட்டுள்ளார். சில மாதங்களாகவே தனிப்பட்ட மன ரீதியான பிரச்னைகளால் அவதிப்பட்டதன் காரணமாகவே பேசுவதை தவிர்த்து வந்ததாகவும், தற்போது ஒவ்வொரு நாளும் மனதளவில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி அனைவரையும் தொடர்பு கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுள்ளார். அதிமுகவின் கருப்பு – வெள்ளை கொடி, ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை தினகரன் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அமமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தற்போது இணைந்துள்ள நிலையில் இபிஎஸ் இந்த வழக்கை திரும்ப பெற்றுள்ளார்.
அல்லு அர்ஜுனுடன் இணைந்து பிரம்மாண்டமான படத்தை இயக்கும் பணியை அட்லீ தொடங்கியுள்ளார். புஷ்பா – 2 வெற்றிக்கு பின் அல்லுவும், ஜவான் வெற்றிக்கு பின் அட்லீயும் இப்படத்தில் கூட்டணி அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க ஜான்வி கபூர், திஷா பதானி மற்றும் ஷரத்தா கபூர் ஆகியோருடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.