India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிள் iPhone 16 Pro செல்ஃபோன் உற்பத்தியை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஓரிரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐஃபோன் புரோ வகை செல்போன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இதுவரை சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்து வந்தது. சீனாவுக்கு வெளியே iPhone 16 Pro, iPhone 16 Pro Max வகை செல்ஃபோன்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்யவிருப்பது, இதுவே முதல்முறை ஆகும். அந்த பெருமையை தமிழகம் பெறுகிறது.
உயர்பதவிகளுக்கான நியமனங்களை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. பொது மேலாளர், வாரிய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 13ஆம் தேதி விண்ணப்பம் கோரிய ரயில்வே, லிங்குகளை அனுப்பி, மனுக்களை கேட்டிருந்தது. ஆனால் திடீரென 16ஆம் தேதி நியமன முடிவுகளை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. இந்திய பொறியாளர் சேவை மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளிடையே நிலவிய அதிருப்தியும், இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்கும்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான BNP, இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் ஹசீனா தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை ஒப்படைக்கும்படி BNP கோரியுள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2024ஐ CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை லீலா பேலஸில் இன்று காலை ₹17,616 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்து, ₹51,157 கோடி முதலீடு கொண்ட 28 திட்டங்களுக்கு CM அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் 1,06,803 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
ICC புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அதன் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்குரிமை கொண்ட 16 போர்டு உறுப்பினர்களில் இங்கி., ஆஸி., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஷாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி NCC முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை தொடர்ந்து, மேலும் 13 மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
உடலில் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகப்படுத்த முடியும். அதற்கு இந்த பானமே போதுமானது. 2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மஞ்சள், 4 பூண்டு, சிறிது இஞ்சி, 4 வெற்றிலை ஆகியவற்றை இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை 250 மி.லி. ஆக சுண்ட விட்டால் 4 பேர் குடிக்கலாம். வாரம் 3 முறை இதை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
ஆபரணத்தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹53,680க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹ 6,710க்கும் விற்பனையாகிறது. கடந்த 12ஆம் தேதி ₹51,760-க்கு விற்பனையான சவரன் தங்கம், 8 நாட்களில் ₹1,920 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என, நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் முருகன் மாநாட்டில், நீங்கள் கலந்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறாரே என நிருபர் கேள்வியெழுப்பினார். அதற்கு, “எந்த நிகழ்ச்சிக்கும் அழையா விருந்தாளியாக நாங்கள் செல்ல மாட்டோம். முறையாக அழைப்பு வந்தால், அது அரசு நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தால் பரீசிலிப்போம்” என அவர் பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.