India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோ வெளியானதும், நீக்கப்பட்டதும் குறித்து தனக்கு தெரியாது என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோ திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் 2 முறை வெளியிடப்பட்டு நீக்கப்பட்டது. இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அதுகுறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், அது தங்கள் கட்சி நீண்ட நாள்களாக வைத்து வரும் கோரிக்கைதான் என பதிலளித்தார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலையாள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நன்னாளாக அமையும் என தனது வாழ்த்து செய்தியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஓணம் வாழ்த்து கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இதேபோல், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. உங்கள் பகுதியில் வெயில் எப்படி? கமெண்ட் பதிவிடுங்க
பாஸ்மதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், மோடி அரசு எடுத்த இந்த முடிவால் விவசாயிகள் விளைவிக்கும் பாஸ்மதி அரிசிக்கு உரிய விலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரியை 32.5%ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மெல்போர்னில் 5 ஜனவரி 1971 அன்று AUS – ENG இடையே நடந்த ஆட்டமே உலகின் முதல் ODI ஃபார்மெட் போட்டியாக கருதப்படுகிறது. வானிலை காரணமாக 3ஆவது டெஸ்ட் நடத்த முடியாமல் போனது. இதனால் போட்டியை கைவிட முடிவு செய்த இருதரப்பும், கூட்டத்தை திருப்திப்படுத்தவும், நிதி இழப்பை சரி செய்யவும் அதற்கு பதிலாக, 40 ஓவர் கொண்ட (White Kit, Red Ball) ஒரு நாள் ஆட்டத்தை விளையாடினர். இதில் AUS 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் ஏற்படும் இரைச்சல் மக்களுக்கும், பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். தனியார் நடத்தும் இந்த சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் எக்ஸ் பக்க பதிவில், உள்ளூர் விவசாயிகளின் விளைப் பாெருள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 0%இல் இருந்து 20%ஆக அதிகரிக்க மோடி அரசு முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக, நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாளை ஒட்டி அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையை சேர்ந்த 100 பேருக்கும், சீருடை பணியாளர்கள் 29 பேருக்கும் இந்த பதக்கம் வழங்கப்படவுள்ளன. மேலும், தாமிரபரணி வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை மீட்ட தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி ஊழியர்கள் மந்திரமூர்த்தி, ராமசந்திரன் ஆகிய இருவருக்கு தீயணைப்பு பணிக்கான வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மழை காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மனதளவில் சோர்வுற்றவர்களை தேற்றும் ஆற்றல் ‘ரத்தனபுருஷ்’ எனும் ஓரிதழ் தாமரைக்கு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. கொமரின், டிரைடெர்பினாய்ட்ஸ், ஆல்கலாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதனை (முழுத் தாவரத்தையும்) பொடி செய்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பாலில் கலந்து 48 நாட்கள் பருகிவந்தால், மன அழுத்தம் நீங்குவதோடு தேகத்துக்குப் பொலிவையும் கொடுக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.