India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப், கமலா ஹாரிஸிடையே முதல் விவாத நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. விவாதத்திற்குப் பின் CNN நடத்திய கருத்துக்கணிப்பில், 63% பேர் கமலாவையும் 37% பேர் ட்ரம்பையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். 2016 தேர்தலுக்கு முன்பு பின்னடைவை சந்தித்த ட்ரம்ப் இறுதியில் வென்றது போலவே இம்முறையும் வெல்வார் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
82 வேலிடிட்டி கொண்ட புதிய மலிவு கட்டணத் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹485 கட்டணத்தை ரிசார்ஜ் செய்தால், தினமும் தலா 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்பு வசதியோடு சேர்த்து, தினமும் 100 எஸ்எம்எஸ் அளிக்கிறது. BSNL செயலியிலும், அதன் இணையதளத்திலும் இந்தத் திட்டம் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யலாம் என BSNL தெரிவித்துள்ளது. SHARE IT.
படித்த இளைஞர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளார். மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டு அனைவரும் சைவமாக மாற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மக்களுக்கு பணம் கொடுத்தால் வாக்களிப்பார்கள் என்ற நிலையை அனைவரும் ஒன்றிணைந்து, மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 2 தேர்வுக்கான விடைக் குறிப்பு அடுத்த 6 வேலை நாட்களில் வெளியாகும் என TNPSC தலைவர் பிரபாகர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் 2 அல்லது 3 மாதங்களில் நிறைவடையும் என்றும், விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2,327 காலியிடங்களுக்கு இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா, கதுவா, கிஸ்துவார் பகுதிகளில் 3 இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அரிஸ்டாட்டில் 2) 68.45 ஆண்டுகள் 3) ஜப்பான் 4) பெரு 5) 24 பிப்ரவரி 1582 ஆம் ஆண்டு 6) மூன்று. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஒரு குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைக்கு ஒரே நேரத்தில் ₹5 லட்சம் வரை பணம் செலுத்தும் வசதி நாளை (செப்.15) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. நிதிக் கொள்கை மறுஆய்வில் RBI எடுத்த இம்முடிவை அடுத்து, நாட்டில் UPI செயல்பாடுகளை நிர்வகிக்கும் NPCI பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது. IT வரி, மருத்துவம் & கல்வி கட்டணங்கள், IPO, அரசுப் பத்திரங்கள் போன்றவற்றுக்கு UPI மூலம் இனி ₹5 லட்சம் வரை
செலுத்த முடியும்.
ஹிந்தி எந்த பிராந்திய மொழிக்கும் போட்டி கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்தி அனைத்து மொழிகளுக்கும் நட்பான மொழி என்று தெரிவித்தார். ஹிந்தியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், இந்தியில் உள்ள இலக்கியம், காப்பியம் உள்ளிட்ட அனைத்தும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
உதயநிதி எந்நேரத்திலும் துணை CM ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. USA பயணத்தை முடித்துவிட்டு ஸ்டாலின் திரும்பியதும், அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி துணை CM ஆக்கப்படுவார் என தகவல் வெளியானது. இதுகுறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் என பதிலளித்தார். இதை சுட்டிக்காட்டி உதயநிதி விரைவில் துணை CM ஆவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் திருமாவளவன் கொடியேற்ற இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் திடீரென அகற்றியுள்ளனர். மதுரை புதூர் பகுதியில் 62 அடி உயர விசிக கொடிக்கம்பம் இருந்தது. அந்த கொடிக்கம்பத்தில் திருமாவளவன் இன்று கொடியேற்றுவதாக இருந்தது. இந்நிலையில், விதிகளை மீறி அக்கொடி கம்பம் இருப்பதாக கூறி போலீசார் அகற்றியுள்ளனர். இதனைக் கண்டித்து விசிகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.