news

News August 22, 2024

நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம் – விஜய் அறைகூவல்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் முன்பும், தமிழக மக்கள் முன்பும் கொடியை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. இது நமது கட்சிக் கொடி மட்டுமல்ல. வருங்கால தலைமுறையினரின் வெற்றிக் கொடியாக இருக்கும். நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.

News August 22, 2024

தவெக மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு: விஜய்

image

தவெக கட்சி கொடியேற்ற விழாவில் விஜய் பேசியதாவது *இந்த நாளுக்காகத்தான் நாம் காத்திருந்தோம் * இது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் *கட்சி மாநாடு எப்போது, எங்கு நடைபெறும் என விரைவில் அறிவிக்கப்படும் *கட்சிக் கொடிக்கான காரணம் குறித்து பிறகு தெரிவிக்கப்படும் *இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழகத்துக்காக உழைப்போம் *நல்லதே நடக்கும், அனைவரும் நம்புவோம்.

News August 22, 2024

BREAKING: கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார்

image

தமிழ்த்தாய் வாழ்த்துடன், விஜய் கட்சிக்கொடி அறிமுக விழா தொடங்கியது. அடர் சிகப்பு, மஞ்சள் நிறத்தில் கொடி உள்ள நிலையில், மையத்தில் போர் யானைகளுடன் வாகைப் பூவும் இடம்பெற்றுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர் தாஹிரா ஆகியோர் விஜய்யுடன் முதல் இருக்கையில் அமர்ந்திருக்க, 2வது இருக்கையில் விஜய்யின் பெற்றோர் அமர்ந்துள்ளனர்.

News August 22, 2024

1111 எண் காரில் கட்சி அலுவலகம் வந்த விஜய்

image

விஜய் இன்று தனது தவெக கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக தனது வீட்டில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரைத் தொடர்ந்து, 4 கார்கள் பின்னால் வந்தன. விஜய் காருக்கு முன்பு ஒரு கார் மட்டும் சென்றது. விஜய் பயணித்த கார் எண் 1111 ஆகும். நியூமராலஜியில் 1111 என்பது ஏஞ்சல் எண் ஆகும். அந்த எண்ணை பயன்படுத்தினால், வெற்றி நிச்சயம் என்று அர்த்தமாகும்.

News August 22, 2024

சிறுமியை பின்தொடர்வதும் பாலியல் துன்புறுத்தல்

image

சிறுமியை பின்தொடர்வது, காதலை வெளிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல்தான் என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. 13 வயது சிறுமியை பின்தொடர்ந்து சென்று 28 வயது இளைஞர் காதலை வெளிப்படுத்தியது தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், இளைஞரின் நோக்கம் கெட்ட நோக்கம் கொண்டது என தெளிவாவதாக தெரிவித்தனர்.

News August 22, 2024

எந்தக் கொள்கையை முன்வைப்பார் விஜய்?

image

தவெக தலைமை அலுவலகத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் விஜய் சற்று நேரத்தில் அறிமுகம் செய்கிறார். பின்னர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். இதில் தனது அரசியல் கொள்கையை விஜய் முன்வைப்பார் எனத் தெரிகிறது. திமுக அதிமுகவின் திராவிடக் கொள்கை, சீமானின் தமிழ்தேசியம், பாஜகவின் தேசியக் கொள்கைகளுக்கு மாற்றாக ஒரு கொள்கையை விஜய் முன்வைப்பார் எனத் தெரிகிறது.

News August 22, 2024

அதுதான் சார் மெட்ராஸ் காரன்!

image

சென்னையின் 385-வது பிறந்தநாளில் அதன் பூர்வக்குடிகளான மெட்ராஸ் காரர்களை பற்றி பேச வேண்டாமா? பார்ப்பதற்கு கரடுமுரடாக தெரிந்தாலும், இயற்கையில் இளகிய மனம் கொண்டவர்கள் அவர்கள். ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் வந்து தட்டிக் கேட்பது பெரும்பாலும் மெட்ராஸ் காரராகவே இருப்பார். விபத்து நடந்தால் எது பற்றியும் யோசிக்காமல், உடனடியாக உதவுபவர்களை கேளுங்கள். “ன்னோவ்.. நமக்கு மெட்ராஸ் தாண்ணா” என்றே பதில் வரும்.

News August 22, 2024

ஆளுங்கட்சிகளை விமர்சிப்பாரா விஜய்?

image

விஜய், தனது முதல் அரசியல் உரையை இன்று நிகழ்த்துகிறார். கட்சித்தொங்கிய போதிலும், பல்வேறு பிரச்சினைகளில் ஆளுங்கட்சிகளை பெரியளவில் விமர்சிப்பதை விஜய் தவிர்த்தே இருந்தார். இதனால் அவர் Safe Game ஆடுகிறாரோ என்ற சந்தேகமெழுந்தது. இந்நிலையில், கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி அவர் பேசவுள்ளார். முதல் அரசியல் உரை என்பதால் ஆளுங்கட்சிகளான திமுக, பாஜகவை அவர் விமர்சிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News August 22, 2024

GAIL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் GAIL நிறுவனத்தில் 391 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜூனியர் என்ஜினீயர் (கெமிக்கல்), (மெக்கானிக்கல்), போர்மென் (எலக்ட்ரிகல் ), (சிவில்) உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த அறிவிப்பை GAIL வெளியிட்டுள்ளது. GAIL இணையதளத்தில் கடந்த 8ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. செப்.7 கடைசி நாள் ஆகும். இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரலாமே. SHARE IT

News August 22, 2024

சென்னை பல்கலை. ரிசல்ட் இன்று வெளியாகிறது

image

சென்னை பல்கலை. தொலைதூரக் கல்வியில் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகவுள்ளது. 2023 டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. அதற்கான ரிசல்ட் இன்று www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது. அதில் தேர்வு முடிவுகளை மாணவ- மாணவிகள் பார்த்து தெரிந்து காெள்ளலாம். SHARE IT

error: Content is protected !!