news

News September 17, 2024

செப்டம்பரா? ஏப்ரல், மேயா?

image

தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி எடுக்கிறது. இரவில் கடும் புழுக்கம் காணப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை பெய்ததை பார்த்து அனைவரும் கடும் மழை இருக்கும் என எண்ணிய நிலையில், அதற்கு நேர்மாறாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதை பார்க்கும் பலரும் இது செப்டம்பரா? ஏப்ரல், மேயா? என கேள்வி எழுப்புகின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே கமெண்ட் பண்ணுங்க

News September 17, 2024

BREAKING: ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

image

டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, APP சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். வரும் சட்டமன்ற தேர்தல் வரை அதிஷி முதல்வராக இருப்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வராக பதவியேற்கும் மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.

News September 17, 2024

தோற்கடிக்கப்படாத அணியாக திகழும் இந்தியா

image

ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் முடிந்த நிலையில் ஒன்றில் கூட IND அணி தோற்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்யானந்தா, குகேஷ் உள்பட IND அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நடைபெற உள்ளது. இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

News September 17, 2024

டிரெய்லர் காட்டுகிறார் விஜய்: தமிழிசை

image

பெரியார் பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்று விஜய் மரியாதை செலுத்தியதை, தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார். “தனது அரசியல் மாநாட்டுக்கு முன்பு விஜய் டிரெய்லர் காட்டுகிறார்” எனவும் சாடியுள்ளார். முன்னதாக, பெரியார் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்ததை விமர்சித்த தமிழிசை, தமிழகத்தில் மற்றுமொரு திராவிடக் கட்சி உதயம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

‘தனுஷ் 52’ படத்தின் அறிவிப்பு வெளியானது

image

‘ராயன்’, ‘குபேரா’ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் இப்படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

News September 17, 2024

விஜய்யுடன் செல்பி எடுத்த திமுக தொண்டர்..!

image

பெரியார் திடலுக்கு விஜய் சென்றது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியார் சிலைக்கு மாலையிட்டு திரும்பிய விஜய்யுடன், திமுக தொண்டர் ஆர்வமாக வந்து செல்பி எடுத்துக் கொண்டார். திராவிட சிந்தனையாளர்களை தன்வசம் இழுக்கும் நோக்கிலேயே விஜய்யின் இந்த பெரியார் திடல் பயணம் இருப்பதாக கூறப்படும் நிலையில், திமுக தொண்டரின் செல்பி சம்பவம் தற்செயலாகவே அரங்கேறியது.

News September 17, 2024

இந்தியா வரலாற்று வெற்றிபெற்ற நாள்

image

கடந்த ஆண்டு இதே நாளில் (செப்.17) Asia Cup இறுதி போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த SL 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. Asia Cup இறுதி போட்டியில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ரன் இதுவாகும். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News September 17, 2024

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவரா?

image

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நம்பியவர்களை எந்தக் காலத்திலும் கைவிட மாட்டீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துக்காட்டுவீர்கள். கோபமோ, சந்தோஷமோ உடனே வெளிப்படுத்திவிடுவீர்கள். தெய்வ நம்பிக்கை, கற்பனை வளம் உங்களிடம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.

News September 17, 2024

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா

image

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறை இந்த ஆட்சியிலேயே அமல்படுத்தப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் உறுதியளித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், அமித் ஷாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News September 17, 2024

சொத்து வரி 6% உயர்வு?

image

2025-26ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் முதல்) வீடு, வணிக கட்டடங்கள் உள்ளிட்டவைகளுக்கான சொத்து வரியை 6% உயர்த்த, தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. சொத்து வரி உயர்ந்தால், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். இது மட்டுமல்லாமல், வணிகர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!