India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக மதுரையில் வெயில் கொளுத்தியது. 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால், மக்கள் மதிய நேரத்தில் வெளியே வரமுடியாமல், கடும் தவிப்புக்கு ஆளாகினர். அதேபோல், சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில் இதுவாகும். மேலும், ஈரோடு, நாகையில் தலா 103 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 3 – 20 வரை நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக்கோப்பை தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி அக்டோபர் 4, 6, 9, 13ஆம் தேதிகளில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் முழுவதும் UAEயில் நடைபெறவுள்ளது. ஆண்கள் அணியைப் போல T20 WCஐ இந்திய மகளிர் அணி வெல்லுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
திமுக முப்பெரும் விழாவில் ‘அண்ணா விருது’ அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், ‘கலைஞர் விருது’ எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கும், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது தமிழ்தாசனுக்கும், ‘பேராசிரியர் விருது’ வி.பி.ராஜனுக்கும், ‘பெரியார் விருது’ பாப்பம்மாள் என்பவருக்கு பதிலாக அவரது பேத்தி ஜெயசுதாவுக்கும் வழங்கினார்.
கவுதம் கம்பீர் தலைமையிலான புதிய கோச்கள், தனி பாணியை பின்பற்றுவதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். டிராவிட் வழங்கிய பயிற்சியை ஒப்பிடும் போது இது வித்தியாசமானது எனக் குறிப்பிட்ட அவர், அதனால் எந்த பிரச்னையும் இல்லை எனக் கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, Head Coach கம்பீர் தலைமையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? கமெண்டல சொல்லுங்க.
இன்று புரட்டாசி தொடங்கியுள்ள நிலையில், இம்மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்ற கூற்று உள்ளது. இந்த மாதத்தில்தான் வெயில் குறைந்து மழை ஆரம்பமாகும். ஏற்கெனவே சூடாக இருக்கும் பூமி, மழை நீரை உள்வாங்கி வெப்பத்தை வெளியிடும். இது வழக்கமான வெப்பத்தைவிட அதிக உஷ்ணமாக இருக்கும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால் உடல் மேலும் சூடாகும் என்பதாலேயே அசைவத்தை தவிர்க்க வேண்டும் என சான்றோர்கள் கூறுகின்றனர்.
CM பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வது இது முதல்முறை அல்ல. 2வது முறை. 2013 டிச.28 ல் முதல் முறை CM ஆன அவர், 48 நாளில் 2014 பிப் 14ல் ராஜினாமா செய்தார். பிறகு 2015, 2020 தேர்தலில் வென்று 9 ஆண்டுகளாக பதவியில் இருந்தார். பாஜக, காங்., மீதான அதிருப்தியால் AAP மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை, மதுபான கொள்கை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளதால் 2015 வெற்றி, மீண்டும் சாத்தியமா என கேள்வி எழுந்துள்ளது.
BAN அணியின் ஷகிப் அல் ஹசன் போல மெஹதி ஹாசனும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கலாம் என முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், BAN அணிக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனத்துடன் விளையாட வேண்டும். நவம்பரில் தொடங்கும் ஆஸி., டெஸ்ட் தொடருக்கு இது ஒரு நல்ல பயிற்சி ஆட்டமாக இருக்கும் என்றார். BAN-IND டெஸ்ட் தொடர் 19ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
திமுக முப்பெரும் விழாவில் CM ஸ்டாலின் அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏற்பாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்ணா (செப்.15), பெரியார் (செப்.17) பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட (செப்.17) நாள் ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.
கேரளாவில் நிஃபா வைரஸால் ஒருவர் உயிரிழந்ததன் எதிரொலியாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். தீவிர கண்காணிப்புக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
டெல்லி CMஆக அதிஷி தேர்வான நிலையில், டெல்லியை கடவுள் தான் காக்க வேண்டும் என ஆம் ஆத்மி MP சுவாதி மாலிவால் கூறியுள்ளார். பயங்கரவாதி அப்சல் குருவை, மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அதிஷி குடும்பம் போராடியதாக குற்றஞ்சாட்டிய அவர், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் தற்போது டெல்லியின் டம்மி CM ஆகியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவால் PA தன்னை தாக்கியதாக சமீபத்தில் இவர் புகாரளித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.