news

News September 18, 2024

FLASH: பிரதமரை சந்திக்கிறார் CM ஸ்டாலின்

image

வரும் 20ம் தேதி PM மோடியை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் PM-ஐ சந்திக்கும் அவர், மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்கும்படி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 18, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤பாகிஸ்தான்: 2028க்குள் பாகிஸ்தானுக்கு ₹66,000 கோடி கடன் வழங்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி அளித்துள்ளது. ➤சீனா: பெபின்கா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஹெனான் மாகாணத்தில் இருந்து 4 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ➤ஜப்பான்: ஜப்பானில் 95,119 பேர் 100 வயதை கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ➤மாலி: ISIS அச்சுறுத்தல் மிகுந்த பமாகோவில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

News September 18, 2024

உதயநிதிக்கு, விஜய் போட்டியா? SSP பதில்

image

விஜய் கட்சி நேற்று முளைத்த செடி என DMK மூத்த தலைவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் விஜய்க்கும், உதயநிதிக்கும் இடையேயான போட்டியாக இருக்குமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். திமுக தமிழக அரசியலில் ஒரு ஆலமரம் என்றும், விஜய் கட்சி திமுகவுக்கு ஒருபோதும் போட்டியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். திமுக 2026இல் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News September 18, 2024

விளையாட்டு துளிகள்

image

➤இலங்கை – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் காலே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. ➤ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் இணைந்து மல்யுத்த சாம்பியன்ஸ் சூப்பர் லீக் தொடர் நடத்த முடிவு. ➤சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வு. ➤லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சதர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக DK நியமனம்.

News September 18, 2024

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள 819 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, NSQF Level -1. சம்பளம் வரம்பு: ₹21,700 – ₹69,100. வயது: 18-25. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.,1. தேர்வு முறை: PET, PST, எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவல்களுக்கு<> ITBP<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News September 18, 2024

என்கவுண்டரில் சரிந்த வட சென்னையின் ‘புஷ்பா’..

image

தான் வசித்த பிராட்வே ஏரியாவை 16 வயதிலேயே தனது கன்ட்ரோலில் கொண்டு வந்தவர் <<14129124>>காக்கா தோப்பு பாலாஜி<<>>. பின் அடுத்தடுத்த கொலைகளால் ஒட்டுமொத்த வட சென்னையும் பாலாஜி வசம் வந்தது. கோடிகளை கொட்டும் செம்மரக் கடத்தல் தொழிலிலும் கிங்காக மாறினார். எதிரிகளை கொடூரமாக கொலை செய்வதே இவரது ஸ்டைல். சென்னையையும், ஆந்திரா எல்லைகளையும் பல ஆண்டுகளாக நடுங்க வைத்த பாலாஜியின் முடிவுரையை துப்பாக்கி குண்டு எழுதிவிட்டது.

News September 18, 2024

விற்பனைக்கு வந்த வாரிய வீடுகள்

image

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. வாரியத்தின் சார்பில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் போக மீதமுள்ளவை நேரடியாக விற்கப்படுகின்றன. அப்படி, சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 20,000 வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இவை, ₹4-12 லட்சம் வரை விற்கப்படுகின்றன. www.tnuhdb.org.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News September 18, 2024

கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம்: மருத்துவர்கள்

image

வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என மே.வங்க பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கொல்கத்தா போலீஸ் ஆணையர் மாற்றம் உள்ளிட்ட மருத்துவர்களின் 3 கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் எனவும், மீண்டும் அரசிடம் புதிய பேச்சுவார்த்தையை தொடர விரும்புவதாகவும் பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News September 18, 2024

துன்பம் விலக்கும் புரட்டாசி வழிபாடு

image

திருமாலுக்குரிய புனித மாதமாக கருதப்படும் புரட்டாசியில், பெருமாளை வழிபாடு செய்பவர் வாழ்வில், முன்னேற்றம் ஏற்படுமென விஷ்ணு புராணம் கூறுகிறது. காலையிலேயே நீராடி, வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, தூபமிட்டு, விரதமிருந்து கோயிலுக்கு சென்று, ஸ்ரீஹரிக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபமிட்டு, விஷ்ணு சகஸ்ரநாமம் பாடி வணங்கினால் துன்பம் விலகி, இன்பமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

News September 18, 2024

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

image

வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்ய சென்ற போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காகச் சுட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

error: Content is protected !!