India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி அக்.31-ம் தேதி வருவதையொட்டி, இதற்கான ரயில் முன்பதிவு கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒருசில நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக லட்சக்கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல, கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ஒரு மாதத்திற்கு முன்பாகவே சிறப்பு ரயில்கள் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டால் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள் வரும் 26ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். விருப்பமில்லாதோர், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் சேர்ந்தாலும் அபராதமின்றி வெளியேறலாம். அனுமதிக்கப்பட்ட தேதிக்குப் பின் படிப்பை கைவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
சிரியாவில் செயல்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற தீவிரவாத அமைப்புக்கு உக்ரைன் அரசு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அமைப்பினருக்கு உக்ரைன் 250க்கும் மேற்பட்ட டிரோன்களை வழங்கியதோடு, இட்லிப் மாகாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. சிரியாவில் புதிய ராணுவ முகாம்களை அமைக்க அமெரிக்காவும், உக்ரைனும் முயன்று வருவது கவனிக்கத்தக்கது.
‘ஜீப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ், சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிதி முறைகேடு தொடர்பான குற்றத்தை மையப்படுத்தி பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் அக்.31இல் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026இல் அதிமுக தோல்வி அடைந்தால் தொண்டர்களே, அதிமுக தலைவர்களை அடிக்கும் சூழ்நிலை உருவாகும் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். பல அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஜால்ரா அடிப்பதாகவும், இதையெல்லாம் நினைத்து பார்த்து அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேர வலியுறுத்தியுள்ளார். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உடன் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்து கேரள ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், இதுதொடர்பான செலவினங்கள் குறித்து கேரள அரசு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 359 பேரின் உடல்களை அடக்கம் செய்ய ரூ.2.76 கோடி செலவிடப்பட்டதாக கூறியுள்ளது. அதாவது, ஒருவரின் உடலுக்கு தலா ரூ. 75,000 செலவு எனக் கூறியிருக்கிறது. பணத்தை கொள்ளையடிக்க கேரள அரசு பொய்க்கணக்கு காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
திமுக பவள விழா பொதுக்கூட்டம் வரும் 28இல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ளுமா? என இபிஎஸ்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விசிக தரப்பில் மாநாட்டுக்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன், ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்தால் கூட்டணியில் இணைத்துக்கொள்வோம் என்றும் அவர் சூசகமாக கூறியுள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா – நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசி இரண்டாம் உலகப் போரை முடித்து வைத்தது அமெரிக்கா. இந்த அணுகுண்டு வீச்சின் ரத்தக் களரியில் இருந்து தப்பிய வெகு சிலரில் சுட்டோமோ யமாகுச்சி என்ற பொறியாளரும் ஒருவர். அவரை மையமாக வைத்து அமெரிக்க எழுத்தாளர் எழுதிய புத்தகமே Last Train From Hiroshima. தற்போது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 20ம் தேதி PM மோடியை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் PM-ஐ சந்திக்கும் அவர், மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்கும்படி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.