India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று பெரியார் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய், அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதன் மூலம் திராவிட அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளதாக விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த உதயநிதி, “யாராக இருந்தாலும் பெரியாரை மீறியோ, பெரியாரை தொடாமலோ அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.
இதிகாச காலத்தில் தொடங்கி நவீன காலம் வரையிலான நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை ‘அரங்க வெளியில் பெண்கள்’ நூலில் இளம்பிறை விரிவாக ஆய்வு செய்துள்ளார். நாடகங்களில் பெண்களின் பாத்திரப் படைப்பு, பங்கு போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. சமத்துவத்திற்கான பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் போராட்டங்களும் நாடகவியலாளர்கள் மங்கை, கலைராணி போன்றோரது கருத்துகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இன்று 10 மணிக்கு <<14129819>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ரிப்பன் பிரபு 2) CO₂ 3) Uninterrupted Power Supply 4) முதலாம் குலோத்துங்கன் 5) சர் ஜென்லிலி 6) தட்டை அணுக்கள் 7) பெலிஸ் கேட்டஸ். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விஜய்யின் அரசியல் வருகையால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சீமான் கூறியுள்ளார். எந்த ஒரு கட்சியாலும் தங்களின் அரசியல் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், நாம் தமிழர் கட்சியால் தான் அடுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் NTK தனித்து போட்டியிடுவதாகவும் ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வெற்றியை பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரியாரை தவிர்த்துவிட்டு யாராலும் அரசியல் செய்ய முடியாது என இயக்குநர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். அதனால் தான் நடிகர் விஜய் பூ தட்டை தூக்கிக்கொண்டு பெரியார் திடலுக்கு சென்றதாகவும், பெரியாரையும், அண்ணாவையும் பின் தொடர்பவர்களைத்தான் தமிழக மக்களுக்கு பிடிக்கும் எனவும் குறிப்பிட்டார். யாருடைய சுய மரியாதை சீண்டப்பட்டாலும், தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்றார்.
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 2வி என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 14.79 Bhp பவர், 14 NM டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இதில் 163.2 cc திறன் சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. டிஸ்க் & டிரம் பிரேக், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், டிஜிட்டல் டிஸ்பிளே, டிராக் ரேஸ் டைமர், 17 அங்குல அலாய் சக்கரங்கள் கொண்ட இதன் ஷோரூம் விலை ₹1.11 லட்சமாகும்.
‘ஆவாரைக் கண்டோர் சாவோரைக் கண்டதுண்டோ’ எனும் முதுமொழி ஆவாரையின் நித்தியத்தன்மையைப் பறைசாற்றுகிறது. டானின்ஸ், அவாரோஸைடு, அவரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் சூரணத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக பயன்படுத்தி வந்தால் நீரிழிவு நோயின் தீவிரம் குறையும், கல்லீரல் பலப்படும், கைகால்களில் உண்டாகும் எரிச்சல் குறையும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
திமுக மூத்த தலைவர்களுடன் 1 மணி நேரமாக CM ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என மூத்த தலைவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நேற்று திமுக பவள விழா மேடையிலேயே கோரிக்கை வைத்தார். இதற்கு கூட்டத்தில் பெரும் ஆதரவு அலை எழுந்தது. தொடர்ந்து, இன்று அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் CM ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில், தொண்டர்கள் பட்டாசு, இனிப்புகளுடன் படையெடுத்துள்ளனர்.
திருச்சி அருகே சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ரயில் நிலையத்திற்கு சில கிலோ மீட்டர் துாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கழன்ற பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மீண்டும் இணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். 30 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
Digital Transactions அதிகரித்திருப்பதால், மோசடிகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக Online ஷாப்பிங் செய்வோரிடம் அவர்களுக்கே தெரியாமல் கார்டில் (cr & dr) இருந்து பணத்தை எடுக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்து, தனிப்பட்ட வங்கி தகவலை உள்ளிடாதீர்கள். ‘HTTPS’ கொண்ட Encrypted இணையதளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.