India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகத்திலேயே முதலைக்கு மட்டும் தான் இரும்பை சாப்பிட்டாலும், அதை ஜீரணிக்கும் திறன் உள்ளது. இதன் பற்களும், தாடையும் இரும்பை கடிக்கக் கூடிய திறனை பெற்றுள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும், 10 மடங்கு அதிகமான இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யும் திறன் முதலைக்கு உள்ளது. மேலும், இதன் செரிமான செயல்பாடுகளில், ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகளவில் உள்ளதால், இரும்பை செரிமானம் செய்ய உதவுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. 1996 -2001 வரை திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். அதுமட்டுமின்றி, கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் ஜோக் ஆகிவிட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஓய்வு அறிவித்துவிட்டு, மீண்டும் வந்து சிலர் விளையாடுவதாகவும், உலகக்கோப்பையை வென்ற பிறகு, டி20 ஃபார்மேட்டிற்கு Goodbye சொல்வதற்கு இதுதான் மிகச்சரியான நேரம் என தோன்றியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய முடிவே இறுதியானது என்பதால், அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2040-க்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2035க்குள் ₹20,193 கோடியில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கவும், ₹1,236 கோடியில் 2028இல் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
‘E-Way Bill’ பதிவு இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பண்டிகை காலம், நிறுவனங்கள் இருப்பு அதிகரிப்பு, கடும் கள அமலாக்க சோதனை காரணமாக ₹10.55 கோடி மதிப்பிலான இ-வே பில் பதிவுகள் உயர்ந்துள்ளன. ₹50,000-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்குள்ளான & மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு CGST விதி 138இன்படி இ-வே பில் கட்டாயமாகும்.
கொரோனா தொற்றின் புதிய திரிபான XEC, 27 நாடுகளில் பரவியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 500 பேருக்கு இந்த தொற்று அறிகுறி இருப்பதாகவும், ஓமிக்ரான் போன்றே இதுவும் மற்றொரு திரிபு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா போன்றே காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு இருக்கும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொண்டால் பாதிப்பை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான குறைந்த விலை டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் 5 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள், தினசரி காலை 7 மணிக்கு மைதான கவுன்டரில் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ₹200 மட்டுமின்றி ₹400, ₹1000 கட்டண டிக்கெட்களையும் பெறலாம். ஆன்லைனில் ₹1,000 முதல் 15,000 வரை தனியாக டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆராய்ந்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இதற்கு ஆதரவாக அறிக்கை அளித்திருந்தது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். இது, சட்ட வடிவம் பெறும் போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் கடந்த வாரம் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்படைந்தனர். இந்நிலையில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.